சமாஜ்வாதியால் பாஜகவை வீழ்த்த முடியாது.. தோல்விக்கு யாரை கைக்காட்டப் போகிறீர்கள்.. ஓவைசி காட்டம்!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: உத்தரப் பிரதேச மாநில மக்களவை இடைத்தேர்தல் தோல்வி, சமாஜ்வாதி கட்சியால் பாஜகவை வீழ்த்த முடியாது என்பதை வெளிப்படையாக காட்டியுள்ளதாக ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி விமர்சித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ராம்பூர், அசம்கர் ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், இரண்டிலும் பாஜக வெற்றிபெற்றது. ராம்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் கன்ஷ்யாம் லோதி 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அதேபோல் அசாம்கார் தொகுதியிலும் பாஜக வேட்பாளர் தினேஷ் லால் யாதவ், சமாஜ்வாதி கட்சியின் தர்மேந்தியர யாதவை தோற்கடித்தார்.

Samajwadi Party is incapable of defeating BJP Says Asaduddin Owaisi

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், அசம்கான் வெற்றிபெற்றதையடுத்து, இவர்கள் இருவரும் தாங்கள் வகித்த வந்த எம்.பி பதவியை ராஜினாமா செய்தனர். அதைத்தொடர்ந்து ராம்பூர், அசம்கர் ஆகிய இந்த இரண்டு தொகுதிகளும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதனால் இரு தொகுதிகளிலும் சமாஜ்வாதி கட்சியினர் வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக வெற்றிபெற்றுள்ளது.

இதுகுறித்து பேசிய உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இந்த இடைத்தேர்தல் வெற்றி வரும் 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மற்றும் மாநிலத்தில் நடைபெறும் பாஜக ஆட்சி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இந்தத் தேர்தல் வெற்றி காட்டுகிறது. அதுமட்டுமல்லாமல் வகுப்புவாத சக்திகளுக்கு மக்கள் சரியான பதிலை வழங்கியுள்ளனர் என்று தெரிவித்தார்.

இந்தநிலையில் தேர்தல் தோல்வி குறித்து சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவை ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஓவைசி, இந்த இடைத்தேர்தல் முடிவுகள் சமாஜ்வாதி கட்சியால் பாஜகவை வீழ்த்த முடியாது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது. இதனால் சிறுபான்மை சமூகங்கள் இதுபோன்ற திறமையற்ற கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது.எனவே இஸ்லாமியர்கள் தங்களுக்கென்று ஒரு அரசியல் அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளுமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்

அகிலேஷ் யாதவ் மக்களைக் கூட சந்திக்காத அளவுக்கு கர்வம் கொண்டவர். பா.ஜ.க-வின் இந்த வெற்றிக்கு யார் காரணம்? இனி அவர்கள் யாரை பி-டீம், சி-டீம் என்று கூறுவார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+