7 எம்.எல்.ஏக்களை தட்டி தூக்கிய ரேவந்த் ரெட்டி!காலியாகும் ராவ் கூடாரம்! மோடி பாணியில் ராகுல் அரசியல்!
ஹைதராபாத்: தெலங்கானா காங். முதல்வர் ரேவந்த் ரெட்டி, பாஜக பாணியில் சந்திரசேகர ராவ் கட்சியின் எம்.எல்.ஏக்களை தன் கட்சி பக்கம் இழுத்து வருகிறார். இதனால், அம்மாநில அரசியலில் மிகப்பெரிய பூகம்பம் கிளம்பியுள்ளது.
தெலங்கானா மாநிலம் கடந்த 2014 ஆண்டு உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி கட்சி (பிஆர்எஸ்) ஆட்சியைக் கைப்பற்றியது. நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இருந்தே தெலங்கானா மாநிலக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் அதை தன் அரசியல் ஆதாயத்திற்குப் பலமாகப் பயன்படுத்திக் கொண்ட பிஆர்எஸ், மீண்டும் 2018இல் நடந்த சட்டசபைத் தேர்தலும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.

ஆனால், நாளடைவில் குடும்ப அரசியல், நிர்வாகத் திறமையின்மை என மாநிலம் பல நெருக்கடிகளைச் சந்திக்கத் தொடங்கியது. சந்திரசேகர ராவ் ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதிப்படைந்தனர். இந்நிலையில்தான் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற 3ஆவது சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 72 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது. இந்தத் தேர்தலில் பிஆர்எஸ் வெறும் 31 இடங்களில் மட்டுமே வென்றது. பாஜக 8 இடங்களைக் கைப்பற்றியது.
இதனையடுத்து முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலை தேறி வீடு திரும்பி இருந்தார். இப்போது அவர் ஆக்டிவ் ஆன அரசியல் செய்யும் நிலையில் இல்லை என்பதை உணர்ந்த இவரது கட்சியின் எம்.எல்.ஏக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆளும் காங்கிரஸ் கட்சியின் பக்கம் தாவி வருகின்றனர்.
இவ்வாறு இதுவரை 7 பி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சிக்கு மாறியுள்ளனர். கூடவே ஆறு எம்எல்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு மாறியுள்ளனர். முன்னதாக பிஆர்எஸ் மாநிலங்களவை உறுப்பினர் கே கேசவ் ராவும் அவரது மகளும் விஜயலக்ஷ்மி ஆர் கட்வால் காங்கிரஸில் இணைந்தனர். விஜயலக்ஷ்மி ஹைதராபாத் மேயராக இருந்து வந்தவர். அவரை தட்டி தூக்கியுள்ளார் தெலங்கானா காங் முதல்வர் ரேவந்த் ரெட்டி.
கடந்த ஆண்டு நவம்பர் ஆட்சி மாறியதிலிருந்து இதுவரை ஏழு எம்எல்ஏக்களை இழந்துள்ளது பிஆர்எஸ். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மொத்தம் உள்ள 119 இடங்களில் பிஆர்எஸ் 39 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 64 இடங்களில் வென்றது. செகந்திராபாத் கண்டோன்மென்ட்டின் தொகுதி பிஆர்எஸ் எம்எல்ஏ லாஸ்யா நந்திதா, கடந்த பிப்ரவரி 23 அன்று நடந்த ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தார்.
இத்தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதனால் 65 பலம் ஆக உயர்ந்தது. இப்போது ஏழு பிஆர்எஸ் எம்எல்ஏக்கள் தங்களின் விசுவாசத்தை மாற்றி கொண்டதால், காங்கிரஸின் பலம் சட்டசபையில் 72 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இரவோடு இரவாக 6 பி.ஆர்.எஸ் எம்.எல்.சிகளும் காங்கிரஸில் இதுவரை இணைந்துள்ளனர். இதனால் மொத்தம் 40 உறுப்பினர்களை கொண்ட மேல் சபையில் காங்கிரஸ் பலம் 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் கட்சி தாவத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
அப்படிப் பார்த்தால் பி.ஆர்.எஸ் கூடாரம் விரைவில் காலியாகலாம் என்கிறார்கள். தனது கட்சி ஆபத்தான கட்டத்தை நோக்கிப் பயணிக்கிறது என்பதை உணர்ந்த சந்திரசேகர ராவ் உடனே கூட்டத்தைக் கூட்டி, “கட்சி இந்த நெருக்கடியிலிருந்து விரைவில் மீண்டும் எழும்” எனத் தொண்டர்களுக்கு நம்பிக்கை அளிக்கும்படி பேசியுள்ளார். தங்களின் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென்று கட்சி மாறியுள்ளதால் அவர்களைப் பதவி நீக்கம் செய்யும்படி சபாநாயகரிடம் பி.ஆர்.எஸ் கோரிக்கை வைத்துள்ளது. பிஆர்எஸ் செயல் தலைவர் கே டி ராமராவ், எம்எல்ஏக்கள் கட்சி மாறும் விவகாரம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விமர்சிக்கும் வகையில், அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கும் வழி இதுதானா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
"பிஆர்எஸ் எம்பி கேசவ ராவ் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பிறகு ராஜினாமா செய்தார். அவரது முடிவை வரவேற்கிறோம். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சீட்டு பெற்றுப் போட்டியிட்ட பிஆர்எஸ் எம்எல்ஏ பற்றியும் காங்கிரஸுக்குத் திரும்பிய அரை டஜன் மற்ற பிஆர்எஸ் எம்எல்ஏக்கள் பற்றியும் உங்கள் நிலைப்பாடு என்ன?" என்று ராகுல் காந்தியை நோக்கி ராமாராவ் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்படிப் பார்த்தால் பாஜக பல மாநிலங்களில் செய்த அதே அரசியலைக் காங்கிரஸ் கட்சி தெலங்கானாவில் செய்ய தொடங்கி உள்ளது. சந்திரசேகர ராவ் கட்சி பி.ஆர்.எஸ் -ஐ ஒழிக்கும் வேலையில் ரேவந்த் ரெட்டி இறங்கியுள்ளார்.
பி.ஆர்.எஸ் ஹைதராபாத் மேயர் விஜயலட்சுமி காங்கிரஸ் கட்சிக்கு தாவியதால், கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம் அதிகரித்தது. பி.ஆர்.எஸ் உறுப்பினர்கள் அவையை நடத்த விடாமல் தகராறு செய்தனர். மேலும் துணை மேயர் மோதே ஸ்ரீலதா ரெட்டியை ராஜினாமா செய்யுமாறு பிஆர்எஸ் கார்ப்பரேட்டர்களும் கூச்சலிட்டனர். மொத்தம் 150 இடங்களைக் கொண்ட ஹைதராபாத் பெருநகர மாநகராட்சியில் பிஆர்எஸ்-க்கு 45 உறுப்பினர்கள் உள்ளன. இதன் கூட்டணிக் கட்சியான ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு 44 உறுப்பினர்கள் உள்ளனர். பாஜகவுக்கு 47 பேர் இருக்கிறார்கள். 10 சுயேச்சை உறுப்பினர்கள் உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications