"அம்மா எழுந்திரும்மா" தலை நசுங்கி கொல்லப்பட்ட தாயின் உடல் அருகே அழுத 2 வயது குழந்தை! பயங்கரம்!
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில், கொலை செய்யப்பட்டு கிடந்த தாயின் சடலத்தின் அருகே, இரண்டு வயது பெண் குழந்தை விடிய விடிய அழுது கொண்டிருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரங்காரெட்டி மாவட்டம் ஷாட்நகர் அருகே உள்ள ரங்காரெட்டிகுடா கிராமத்தைச் சேர்ந்தவர் ஷோபா (31). இவருக்கு 7 வயதில் ஒரு மகனும், 2 வயது மகளும் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்த ஷோபா, அதே கிராமத்தைச் சேர்ந்த நரசிம்முலு என்பவருடன் பழகி வந்ததாக தெரிகிறது. பின்னர் அவரிடமிருந்தும் பிரிந்து தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை அன்று நரசிம்முலு, ஷோபாவைத் தொடர்பு கொண்டு, அவரது மகனுக்கு சைக்கிள் வாங்கித் தருவதாகக் கூறி ஷாட்நகருக்கு வரவழைத்துள்ளார். முதலில் மகனுடன் சென்ற ஷோபா, நரசிம்முலு வராததால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.
மீண்டும் இரவு நேரத்தில் தனது 2 வயது மகளை மட்டும் தூக்கிக் கொண்டு நரசிம்முலுவைச் சந்திக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை கிராமத்தின் ஒதுக்குப்புறமான ஒரு விவசாய நிலத்தில், ஷோபா தலை நசுக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். அவர் அருகே 2 வயது பெண் குழந்தை, "அம்மா எழுந்திரு" என்று அழுது கொண்டே அமர்ந்திருந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சனிக்கிழமை இரவு முழுவதும் அக்குழந்தை தனது தாயின் சடலத்தின் அருகிலேயே அழுது கொண்டே அமர்ந்திருந்தது தெரியவந்துள்ளது. குழந்தையின் அழுகுரலை அவ்வழியாக சென்றவர்கள் கேட்டுவிட்டு காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து வந்த ஷாட்நகர் போலீசார், ஷோபாவின் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். ஷோபாவின் தாய் கருணம்மா கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள நரசிம்முலுவைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட தாயின் உடல் அருகே பசியோடும் பயத்தோடும் விடிய விடிய அழுது கொண்டிருந்த குழந்தையின் நிலை அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் எனப் போலீசார் கருதுகின்றனர். "மகனுக்குச் சைக்கிள் வாங்கித் தருகிறேன்" என்று ஆசை காட்டி வரவழைத்த நரசிம்முலு, ஷோபாவை ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு மறைத்து வைத்திருந்த பாறாங்கல்லைக் கொண்டு தலையில் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.
தலைமறைவாக உள்ள நரசிம்முலு மீது ஏற்கனவே சில வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நரசிம்முலுவை ரங்காரெட்டி மாவட்டப் போலீசார் 3 தனிப்படைகள் அமைத்துத் தேடி வருகின்றனர்.
உயிரிழந்த ஷோபாவின் 7 வயது மகன் தனது பாட்டியின் பராமரிப்பில் இருந்து வருகிறார். தாயை பறிகொடுத்த இரு குழந்தைகளின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications