அமலாக்கத்துறை பதிலால் சந்திரபாபு நாயுடு நிம்மதி.. ஆந்திராவில் ஜெகன் தரப்புக்கு பெரிய ட்விஸ்ட்
ஹைதராபாத்: கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தார். அப்போது மாநில திறன் மேம்பாட்டு கழகத்தில் திறன் மேம்பாட்டு திட்டம் சிறப்பு மையங்கள் அமைக்க ரூ.3 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் பல கோடி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடு 50 நாட்கள் சிறையில் இருந்தார். இந்நிலையில் திறன் மேம்பாட்டு முறைகேடு வழக்கில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்பு இல்லை என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. இதனால் சந்திரபாபு நாயுடு நிம்மதி அடைந்துள்ளார்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி மாறி மாறி முதல்வராக இருந்து வந்துள்ளனர். இருவருமே ஒருவரை ஒருவர் பழிவாங்கும் வகையில் வழக்குகளை பதிவு செய்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தார். அப்போது ஆந்திர மாநில திறன் மேம்பாட்டு கழகத்தில் திறன் மேம்பாட்டு திட்டம் சிறப்பு மையங்கள் அமைக்க ரூ.3 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக அம்மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றம்சாட்டினார்கள்.
இந்நிலையில் ஆந்திராவில் கடந்த முறை முதல்வராக இருந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், இதுதொடர்பாக ரூ.300 கோடி அளவில் முறைகேடு நடந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடு 2023-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். சிறையில் 50 நாட்களுக்கு மேல் அடைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடு பின்னா் இந்த வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். பின்னர் 2024-ம் ஆண்டு நடந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்ட சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார்.
இந்தநிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த ஆந்திர போலீசார், ஆட்சி மாற்றத்திற்கு பின்னர், முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது குற்றம் எதுவும் இல்லை என அறிக்கை தாக்கல் செய்தனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஊழல் வழக்கில் இருந்து சந்திரபாபு நாயுடுவை விடுவித்து உத்தரவிட்டது.
முன்னதாக இந்த வழக்கில் பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது. விஜயவாடா நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்த வழக்கில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எந்த தொடர்பும் இல்லை என அமலாக்கத்துறை துணை குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருக்கிறது.
இந்த விவகாரத்தில் புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதன் விசாரணை கடந்த மாதம் 28-ந்தேதி அன்று நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டது என அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது. இதுகுறித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கண்ணபாபு, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செல்வாக்கால் சந்திரபாபு நாயுடு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக விமர்சித்துள்ளார்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications