திருப்பதிக்கு வந்த நடிகை ரோஜா.. முற்றுகையிட்ட தன்னார்வலர்கள்.. ஜெய் அமராவதி என கோஷம்.. பரபரப்பு
ஐதராபாத்: திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வந்த நடிகை ரோஜாவை தன்னார்வலர்கள் முற்றுகையிட்டு ஜெய் அமராவதி என கோஷம் எழுப்பியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்படது.
நடிகையும் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா இன்று திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்த ரோஜாவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவிலில் சாமி தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்த ரோஜாவை தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி சேவை அமைப்பின் கீழ் சேவை செய்ய வந்திருந்த பெண் தன்னார்வலர்கள் முற்றுகையிட்டனர்.

ஆந்திர மாநில தலைநகராக அமராவதியை மீண்டும் அறிவிக்க வேண்டும் என்று கூறி அவர்கள் கோஷம் எழுப்பினர். அதுமட்டும் இன்றி ஜெய் அமராவதி என கோஷம் எழுப்புமாறு ரோஜாவையும் வலியுறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனிமாநிலமாக பிரிக்கப்பட்டதையடுத்து ஆந்திர தலைநகராக அமராவதியை அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
இதற்கான ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில், ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் ஏற்படுத்தப்படும் என்று ஜெகன் மோகன் ரெட்டி கடந்த ஆண்டு அறிவித்தார். இதற்கு தெலுங்கு தேசம் கட்சி மற்றும் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் தான் சாமி தரிசனம் செய்ய வந்த ரோஜாவை சூழ்ந்து கொண்ட தன்னார்வலர்கள் (Shrivari) ரோஜாவையும் ஜெய் அமராவதி என கோஷம் எழுப்ப வைத்தனர். இந்த சம்பவம் அறிந்ததும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். அமைச்சர் ரோஜாவை திருப்பதியில் தன்னார்வலர்கள் சூழ்ந்து கொண்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications