ஐபிஎல்லில் ஆரம்பமே அடி.. சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கு ஷாக் கொடுத்த ஹேக்கர்கள்! என்னாச்சு?
இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மார்ச் 31ம் தேதி துவங்கி வழக்கம்போல் விறுவிறுப்பாக நடைபெற உள்ளது.
ஹைதரபாத்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 31ம் தேதி துவங்கி நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அதாவது அந்த அணிக்கு ஹேக்கர்கள் இன்று அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இந்தியா சார்பில் ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும் இந்தியாவில் நடக்கும் இந்த போட்டிகள் அவ்வப்போது ஐக்கிய அரபு எமிரேட்சிலும் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் ஐபிஎல் 16வது சீசன் இந்த மாதம் இறுதியில் துவங்க உள்ளது.
இதற்கான போட்டி அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி மார்ச் 31ல் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் தல தோனி தலைமையிலான சிஎஸ்கே அணிகள் மோத உள்ளன.

ஹைதரபாத் அணி
இதனால் அனைத்து அணிகளும் தற்போது பயிற்சியை தொடங்கி உள்ளன. வெளிநாட்டு வீரர்களும் ஐபிஎல்லில் தாங்கள் ஆடும் அணிகளில் இணைய தொடங்கி உள்ளனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க சிறப்பாக தயாராகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு 2023ம் ஆண்டு சீசனுக்கான புதிய ஜெர்சியை ஹைதராபாத் அணி அறிமுகம் செய்தது.

கோப்பையை கைப்பற்ற...
கடந்த 2 ஆண்டுகளாக இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் அணி சிறப்பாக செயல்படவில்லை. அதாவது 2020 முதல் அந்த அணி பிளேஆப் சுற்றுக்குள் நுழையாமல் லீக் போட்டியிலேயே வெளியேறி வருகிறது. இதனால் இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் பிற அணிகளை போல் ஹைதராபாத் அணியும் களம் காண உள்ளது. ஏய்டன் மார்க்ரம் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அணி தனது முதல் போட்டியில் ஏப்ரல் 2ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

துவக்கத்திலேயே அதிர்ச்சி
மேலும் ஐபிஎல்லில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கென சமூக வலைதள பக்கங்கள், யூடியூப் சேனல்களை வைத்துள்ளன. அதேபோல் ஹைதராபாத் அணியும் யூடியூப் சேனல் வைத்துள்ளது. புதிய ஜெர்சி அறிமுகம் செய்தது தொடர்பான வீடியோக்கள் யூடியூப்பில் வெளியிடப்பட்டன. இந்நிலையில் போட்டி துவங்குவதற்கு முன்பே ஹைதரபாத் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்பட்டுள்ளது.

என்ன நடந்தது?
அதாவது அந்த அணியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் Sunrisers IPL என்பது இன்று முடக்கப்பட்டுள்ளது. யாரோ மர்மநபர்கள் இந்த யூடியூப் பக்கத்தை ஹேக் செய்துள்ளனர். ஹேக் செய்யப்பட்ட இந்த யூடியூப் பக்கத்தில் கிரிப்டோ முதலீடுகள், ஹேக் செய்வது தொடர்பான வீடியோக்கள் தொடர்ச்சியாக பதிவேற்றப்பட்டு வருகின்றன. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அணியில் யார் யார்?
நடைபெற உள்ள ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஏய்டன் மார்க்ரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அணியின் தமிழ்நா்டை சேர்ந்த டி நடராஜன், வாஷிங்டன் சுந்தர், அப்துல் சமத், உம்ரான் மாலிக், ராகுல் திரிபாதி, அபிஷேக் சர்மா, கார்த்திக் தியாகி, புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், க்ளென் பிலிப்ஸ், பசல்ஹாக் பரூக்கி, ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ஹென்ரிச் கிளாஸ் ராஷிலாஸ் , மயங்க் மார்கண்டே, விவ்ராந்த் சர்மா, சமர்த் வியாஸ், சன்வீர் சிங், உபேந்திர சிங் யாதவ், மயங்க் டாகர், நிதிஷ் குமார் ரெட்டி, அகேல் ஹொசைன், அன்மோல்பிரீத் சிங் உள்ளிட்டவர்கள் அணியில் உள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications