ரியல் எஸ்டேட் அதிபருடன் சுவாதிக்கு கள்ளக்காதல் .. பணமழையில் நனைந்தவருக்கு.. நம்பவே முடியாத சம்பவம்
ஹைதராபாத் : தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் திம்மாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுவாதி என்பவருக்கு திருமணம் ஆகி மகன்கள் உள்ளனர். இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர் ஏற்கனவே திருமணமான கிஷன் என்ற ரியல் எஸ்டேட் அதிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இந்த கள்ளக்காதலை அறிந்த ரியல் எஸ்டேட் அதிபரின் குடும்பத்தினர் சுவாதியை என்ன செய்தார்கள் தெரியுமா... தெலுங்கானாவை நடுங்க வைத்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
கணவனை பிரிந்து வாழும் பெண்களை பண முதலைகள், செல்வாக்கான நபர்கள், ஆசை வலை வீசுகிறார்கள். இதில் சில பெண்கள் வாழ்க்கையை தொலைத்துவிடுகிறாகள். சிங்கள் வுமனாக வாழும் பெண்களுக்குத் தேவையான பாதுகாப்பு, பொருளாதார ஆதரவு, மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவு இல்லாத காரணத்தால் இப்படியான கவலைக்குரிய சம்பவங்கள் நடக்கிறது. அதேநேரம் பணம் , செல்வாக்கு உள்ளவர்களை குறிவைத்து சில சிங்கள் மதர் பெண்களும், திருமணமே ஆகியிருந்தாலும் தங்கள் வலையில் வீழ்த்துகிறார்கள். இரண்டுமே நடக்கிறது. இதில் என்னவே பாதிக்கப்படுவது இரண்டு தரப்பும் தான்.

கணவனை பிரிந்து வாழும் சிங்கிள் மதரை பொறுத்தவரை, திருமண முறிவினால் ஏற்பட்ட மனச்சோர்வு, தனிமை மற்றும் உணர்ச்சி சிக்கல் காரணமாக தன்னிடம் அன்பு காட்டுவோர் அல்லது ஆதரவு தருவோரை நம்பிவிடுகிறார்கள். சிலர் நெருங்கிப் பழகிவிடுகிறார்கள். அதேபோல் சிலர் விவாகரத்து அல்லது பிரிவுக்குப் பிறகு, பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேரிடுகிறது. குழந்தைகளைப் பராமரித்தல் மற்றும் வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க நிதி உதவி தேவைப்படுகிறது. அப்போது பணவசதி படைத்தவர்களின் வாக்குறுதிகளுக்கு அவர்கள் எளிதில் மயங்கிவிடும் நிலையும் ஏற்படுகிறது.
கணவனை பிரிந்த அல்லது விவாகரத்து பெற்ற பெண்கள் சமூகத்தில் ஒருவிதமான ஒதுக்கப்படுவதும் நடக்கிறது. அதேபோல் அவர்கள் தனிமை உணர்வை சந்திப்பதால், புதிய உறவுகள் மூலம் மீண்டும் சமூக அங்கீகாரத்தைப் பெற விரும்புகிறார்கள். இதுவே கள்ளக்காதலுக்கு முதல் காரணமாக மாறிவிடுகிறது. கணவருடன் இருந்தபோது கிடைத்த பாதுகாப்பு உணர்வு , சில பணக்காரர்கள் நபர்கள் மூலம் கிடைப்பதால், அதனை அவர்கள் கைவிட தயாராகவும் இல்லை.. இது இருதரப்பிலும் சிக்கலாக முடிகிறது. தெலுங்கானாவில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் திம்மாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதாகும் சுவாதிக்கு, திருமணமாகி கணவரும், 2 மகன்களும் உள்ளார்கள். சுவாதி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, துண்டிகல் என்ற இடத்தில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் கிஷன் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
தொழில் அதிபர் கிஷனுக்கு திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். சுவாதியின் ஒரு மகன் விடுதியில் தங்கி படித்து வந்தான். மற்றொரு மகன் அவருடன் தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். ஒருகட்டத்தில் கிஷனுக்கும், சுவாதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.
இதனால் அந்த குடியிருப்பில் உள்ள அனைத்து வீடுகளின் வாடகையையும் வாங்கி சுவாதிக்கு கிஷான் செலவு செய்து வந்தார். இது உரிமையாளரின் குடும்பத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியது. எனவே சுவாதியை தீர்த்துக்கட்ட கிஷனின் சகோதரி மகன் ராஜேஷ் என்பவர் திட்டமிட்டார். நேற்று முன்தினம் சுவாதியும், அவரது இளைய மகனும் வீட்டில் இருந்துள்ளார்கள்.. அப்போது திடீரென உள்ளே நுழைந்த ராஜேஷ் தனது நண்பர் வம்சி என்பவருடன் சேர்ந்து மகன் கண்முன்னே சுவாதியை கழுத்தை அறுத்துக்கொன்றனர். பின்னர் ராஜேஷ் மட்டும் போலீசில் சரண் அடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய வம்சியை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications