களம் 8ல் கடும் சண்டை.. கேசிஆரை எதிர்த்து நிற்கும் 100+ வேட்பாளர்கள்.. 2 தொகுதிகளிலும் டஃப் ஃபைட்!
ஹைதராபாத்: தெலுங்கானா தேர்தல் வாக்குப்பதிவு தேதி நெருங்கி வரும் நிலையில், இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
தற்போதைய சூழலில், சந்திர சேகர் ராவ் போட்டியிடும் 2 தொகுதிகளிலும் அவரை எதிர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் தென் மாநிலமான தெலுங்கானாவில் வரும் நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. தெலுங்கானாவில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 3ஆம் தேதி தெலுங்கானாவில் வேட்புமனுத்தாக்கல் தொடங்கி 9ஆம் தேதி முடிவடைந்தது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 13ஆம் தேதி நடைபெற்றது. வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் இன்று. தேர்தல் நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறுகிறது.
தெலுங்கானாவில் சந்திர சேகர் ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. ஆளும் பிஆர்எஸ் 3வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக போராடி வருகிறது. அதேசமயம், காங்கிரஸ் கட்சி பயங்கர டஃப் கொடுத்து வருகிறது. பாஜகவும் தெலுங்கானாவில் காலூன்ற கடுமையாக முயன்று வருகிறது. குறிப்பாக பாஜகவுக்காக பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து தேர்தல் பரப்புரை செய்தார். அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலர் தெலங்கானாவில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
பிஆர்எஸ், தெலுங்கானாவின் 119 இடங்களிலும் போட்டியிடுகிறது, அதே நேரத்தில் காங்கிரஸ் அதன் கூட்டணிக் கட்சியான சிபிஐக்கு ஒரு இடத்தை ஒதுக்கியுள்ளது. பாஜக 111 இடங்களில் போட்டியிடுகிறது, மீதமுள்ள 8 தொகுதிகளில் அதன் கூட்டணிக் கட்சியான ஜனசேனா கட்சி போட்டியிடுகிறது. அசாதுதீன் ஓவைசியின் AIMIM ஒன்பது இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது மற்றும் மற்ற இடங்களில் கேசிஆரின் பி.ஆர்.எஸ் கட்சிக்கு ஆதரவை அறிவித்துள்ளது.
தெலுங்கானாவைப் பொறுத்தவரை அங்கே மொத்தமுள்ள 119 தொகுதிகளில், பெரும்பான்மை பெற எந்தவொரு கட்சியும் குறைந்தது 60 இடங்களில் வெல்ல வேண்டும். கருத்துக்கணிப்புகளைப் பொறுத்தவரை பெரும்பாலும், பிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதேசமயம், காங்கிரஸ் கட்சி 50க்கும் அதிகமான இடங்களில் வெல்லும் என்றும் கணிக்கப்படுகிறது.
தெலுங்கானா முதல்வரும், பி.ஆர்.எஸ் தலைவருமான கே.சந்திரசேகர ராவ், இந்த தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். சித்திப்பேட்டை மாவட்டம் கஜ்வேல் தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்தார் கேசிஆர். அதேபோல, காமாரெட்டி மாவட்டம் காமாரெட்டி தொகுதியிலும் கேசிஆர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். சந்திரசேகர ராவ் முதல்முறையாக 2 தொகுதிகளில் இந்த முறை போட்டியிடுகிறார்.
கஜ்வேல் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு கே.சந்திரசேகர் ராவ் 2 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தொகுதியில், கடந்த 2014 ஆம் ஆண்டு போட்டியிட்டபோது 19,391 வாக்குகள் வித்தியாசத்திலும் 2018 ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் 58,290 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றார் கேசிஆர். இந்த முறை, முன்னாள் பிஆர்எஸ் உறுப்பினரும், ஹுசூராபாத் எம்எல்ஏவுமான பாஜகவின் எடெலா ராஜேந்தர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தூம்குண்டா நர்சா ரெட்டி ஆகியோரை கேசிஆர் எதிர்கொள்கிறார் .
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிவுற்று வேட்பாளர்கள் பட்டியலை தெலங்கானா மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 119 தொகுதிகளுக்கு மொத்தம் 4,798 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் வேட்பு மனு பரிசீலனை செய்ததில் 2,898 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்றே கடைசி நாள் என்பதால், இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் போட்டியிடும் கஜ்வேல் தொகுதியில் அவரை எதிர்த்து மொத்தம் 154 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதேபோன்று கேசிஆர் போட்டியிடும் மற்றொரு தொகுதியான காமாரெட்டி தொகுதியில் அவரை எதிர்த்து 102 பேர் போட்டியிடுகின்றனர். இதில் பலர் காமரெட்டி விவசாயிகள் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (ஜேஏசி) உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காமாரெட்டி நகராட்சியின் மாஸ்டர் பிளான் திட்டத்தால் நிலத்தை இழக்கும் விவசாயிகள் கேசிஆருக்கு எதிராக களமிறங்கியுள்ளனர். மேலும், காங்கிரஸ் கட்சியின் தெலுங்கானா மாநில தலைவர் ரேவந்த் ரெட்டியும் கேசிஆரை எதிர்த்து காமாரெட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று மாலை வெளியாகும் இறுதி வேட்பாளர் பட்டியலில் மொத்தம் எத்தனை வேட்பாளர்கள் என்ற முழு விவரம் தெரியவரும்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications