தெலுங்கானா: கேசிஆர்- ஓவைசி கூட்டணிக்கு செம்ம அடி? முஸ்லிம்கள் கூட்டமைப்பு முடிவால் பரபர திருப்பம்!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவளிப்போம் என முஸ்லிம்கள் கூட்டமைப்பு அறிவித்திருப்பது முதல்வர் கேசிஆர் தலைமையிலான ஆளும் பிஆர்எஸ்- ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி கூட்டணிக்கு பெரும் பின்னடைவு என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தெலுங்கானாவின் 119 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 30-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அனைத்து வாக்குகளும் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

களநிலவரம் என்ன?: தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ்- ஓவைசி கட்சி கூட்டணி ஹாட்ரிக் வெற்றிக்கு காத்திருக்கிறது. ஆனால் பிஆர்எஸ் கூட்டணி ஆட்சியை காங்கிரஸிடம் பறிகொடுக்கக் கூடும் என்கின்றன பல தேர்தல் கருத்து கணிப்புகள். அதேநேரத்தில் தொங்கு சட்டசபை அமையவும் வாய்ப்புள்ளதாகவும் சில கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இம்மாநிலத்தில் பாஜகவும் முட்டி மோதுகிறது.
முஸ்லிம் வாக்குகளும் காங்கிரஸும்: நாட்டின் பல மாநிலங்களில் பாஜக- காங்கிரஸ் இடையேயான நேரடி மோதல்களில் 70% முதல் 80% வரையிலான முஸ்லிம் வாக்குகள் மொத்தமாக காங்கிரஸுக்கு கிடைப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தைப் பொறுத்தவரையில் முஸ்லிம் வாக்குகளை அறுவடை செய்வதில் ஆளும் பிஆர்எஸ்- ஓவைசி கட்சி கூட்டணி, காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது. பாஜகவைப் பொறுத்தவரையில் முஸ்லிம்களின் 4% இடஒதுக்க்கீட்டை ரத்து செய்வோம் என்பதை தேர்தல் வாக்குறுதியாக அளித்து வருவதால் முஸ்லிம்கள் வாக்குகள் எந்த அணிக்கு மொத்தமாக போகப் போகிறது என்கிற கேள்வி எழுந்துள்ளது.
தெலுங்கானா முஸ்லிம் வாக்குகள்: தெலுங்கானா மாநிலத்தில் சிறுபான்மையினர் வாக்குகள் மொத்தம் 14%. இஸ்லாமியர்கள் மட்டும் 12.7%. கிறிஸ்தவர்கள் 1.3%. தெலுங்கானாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மை வாக்காளர்களாக உள்ள தொகுதிகளில் 7 எப்போதும் ஓவைசியின் மஜ்லிஸ்ட் கட்சி கோட்டையாகவே இருந்து வருகின்றன. இந்த தொகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்கள் சுமார் 50%-க்கும் அதிகமாக உள்ளனர். இவை தவிர 29 தொகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். 2014-ம் ஆண்டு தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது முதலே முஸ்லிம் வாக்காளர்கள் பொதுவாக கேசிஆர்-ன் பிஆர்எஸ் கட்சிக்கே வாக்களித்தும் வருகின்றனர்.
காங்கிரஸ் இலக்கு: ஆனால் தற்போதைய தேர்தலில் இந்த கணக்கு மாறப் போகிறது என்பதையே களநிலவரங்கள் வெளிப்படுத்துகின்றன. கர்நாடகாவில் மதம் சார்ந்த ஹிஜாப், ஹலால் உள்ளிட்ட விவகாரங்கள் மையம் கொண்டிருந்ததால் முஸ்லிம் வாக்குகள் அப்படியே காங்கிரஸுக்கு விழுந்தன. ஆனால் தெலுங்கானாவில் அப்படியான பிரச்சனைகள் எதுவும் இல்லை. இருந்தபோதும் சிறுபான்மையினர் வாக்குகளை இலக்கு வைத்து தனி தேர்தல் அறிக்கையையே வெளியிட்டிருக்கிறது காங்கிரஸ். அதில், சிறுபான்மையிர் நலனுக்கு பட்ஜெட்டில் ரூ4,000 கோடி நிதி ஒதுக்குவோம் என்பது முதன்மையான வாக்குறுதி.
பாஜக பி டீம் பிரசாரம்: மேலும் பிஆர்எஸ்-ஓவைசி கட்சி கூட்டணியானது பாஜகவின் பி டீம் என்பத்ஐ இடைவிடாமல் காங்கிரஸ் பிரசாரம் செய்து வருகிறது. பாஜகவில் இருந்து அண்மையில் வெளியேறிய நடிகை விஜயசாந்தி கூட, முதல்வர் கேசிஆர்- பாஜக இடையே ரகசிய உடன்பாடு உள்ளது; அதனால்தான் கேசிஆர் குடும்பத்தின் மீது பாஜக ஒருநடவடிக்கையும் எடுக்கவில்லை என விமர்சித்த கையோடு பாஜகவில் இணைந்தார்.
முஸ்லிம்கள் கூட்டமைப்பு: இந்த பின்னணியில் தற்போது முஸ்லிம்கள் கூட்டமைப்பு வெளிப்படையாக காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என அழைப்பு விடுத்திருக்கின்றனர். இந்த அறிவிப்பு தெலுங்கானாவில் காங்கிரஸ் எதிர்பார்த்த ஒன்றாக நடந்துள்ளது. அதேநேரத்தில் முஸ்லிம் கூட்டமைப்பின் இந்த முடிவானது ஆளும் பிஆர்எஸ்- ஓவைசி கட்சி கூட்டணிக்கு எதிர்பாராத பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications