பிரதமர் மோடியை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வரவேற்க செல்லாதது ஏன்?.. மாநில அரசு விளக்கம்!
ஹைதராபாத்: பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் செல்லாதது ஏன் என்பதற்கான விளக்கத்தை முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்ட 216 அடி உயர ராமானுஜர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று நேற்று மாலை திறந்து வைத்தார். நெற்றியில் நாமம் அணிந்து கொண்டு அவர் சிலையை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், தெலுங்கானா மாநில அமைச்சர் தலாசனி ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

தெலுங்கானா முதல்வர் கேசிஆர்
ஆனால் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் செல்லவில்லை. அவருக்கு பதிலாகத்தான் அமைச்சரை அனுப்பி விட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தெலுங்கானா பாஜகவும் கடும் கண்டனத்தை தெரிவித்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடியை தனிப்பட்ட முறையில் சந்திரசேகர ராவ் கடுமையாக விமர்சித்திருந்தார்.

வரி குறைப்பு
மேலும் பெட்ரோல் டீசல் விலை விவகாரத்திலும் வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளை கேட்ட நிலையில், வரியை ஏற்றிய முட்டாள்தான் அதை குறைக்க வேண்டும் என தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் விமர்சித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

முதல்வர் சந்திரசேகர ராவ்
அது போல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் செய்தியாளர்கள் சந்திப்பில் , பாஜக மத்தியில் இருந்து அகற்றப்பட்டு வங்கக் கடலில் வீசப்பட வேண்டும். நமது அரசியலமைப்பை மாற்றி எழுத வேண்டும் என விமர்சித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

முதல்வருக்கு காய்ச்சல்
இந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பிரதமர் மோடியை வரவேற்க விமான நிலையத்திற்கும் வராமல் ராமானுஜர் சிலை திறப்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் "முதல்வர் சந்திரசேகர ராவுக்கு காய்ச்சல் இருந்ததால் அவரால் பிரதமரை வரவேற்கவும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் முடியவில்லை" என தெரிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications