தலைகீழாக தொங்கிய தெலங்கானா முதல்வர் மகன் கேடி ராமராவ்! பிரசார வேனில் இருந்து விழுந்ததால் பரபரப்பு
ஹைதராபாத்: தெலங்கானா சட்டசபை தேர்தலையொட்டி அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவின் மகனும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான கேடி ராமராவ் சென்று கொண்டிருந்த பிரசார வாகனத்தின் மேல்புறத்தில் இருந்து திடீரென கீழே விழுந்து தலைகீழாக தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வீடியோ வெளியாகி வருகிறது.
தெலங்கானா மாநில சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது. தற்போது அங்கு பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி நடக்கும் நிலையில் முதல்வராக அந்த கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ் உள்ளார்.

2014ல் ஆந்திராவில் இருந்து பிரிந்து தெலங்கானா புதிய மாநிலமாக உருவானது. இதையடுத்து நடந்த சட்டசபை தேர்தலில் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதன்பிறகு 2018 ல் நடந்த தேர்தலில் மீண்டும் சந்திரசேகரராவ் கட்சி வெற்றி பெற்றது. சந்திரசேகரராவ் தொடர்ந்து 2வது முறையாக முதல்வராக பதவியேற்று செயல்பட்டு வருகிறார்.
தற்போது தெலங்கானா சட்டசபையின் பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது. இதனால் தெலங்கானாவில் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் மாதம் 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் ஓட்டுகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
तेलंगाना के मंत्री और #BRS के नेता केटीआर राव निज़ामाबाद जिले के आर्मूर में एक चुनावी रैली के दौरान वाहन से गिरे।pic.twitter.com/MquTwq2ldK
— Ambuj Mishra (@Ambujmishra9090) November 9, 2023
தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் வரும் தேர்தலில் வெற்றி பெற்று சந்திரசேகர ராவ் ஹாட்ரிக் சாதனை படைக்க முயன்று வருகிறார். ஆனால் இதனை தடுக்கும் வகையில் காங்கிரஸ், பாஜக கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் கட்சி இந்த முறை ஆட்சியை பிடிக்க தீவிரமாக பணியாற்றி வருகிறது. பல கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளன. இது அந்த கட்சியினரை உற்சாகப்படுத்தி உள்ளது.
இருப்பினும் சந்திரசேகரராவ் எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என முயற்சித்து வருகிறார். இந்நிலையில் தான் சந்திரசேகரராவின் மகனும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான கேடி ராமராவ் தற்போது சிர்சிலா தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். நடைபெற உள்ள தேர்தலில் இவர் மீண்டும் சிர்சிலா தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். இவர் தனது தொகுதி உள்பட மாநிலம் முழுவதும் பிஆர்எஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் தான் கேடி ராமராம் தெலங்கானாவில் உள்ள ஆர்மூர் பகுதியில் இன்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது பிரசார வாகனத்தின் மேல் அவர் மற்றும் நிர்வாகிகள் நின்று மக்களை பார்த்து கையசைத்து சென்றனர். இந்த வேளையில் திடீரென்று டிரைவர் பிரேக் பிடித்தார். அப்போது வாகனத்தின் மீது நின்ற கேடி ராமராவ் உள்பட பலர் பிடித்திருந்த இரும்பு தடுப்பு முறிந்தது.
இந்த வேளையில் முன்வரிசையில் நின்ற கேடி ராமராவ் உள்ளிட்ட சில நிர்வாகிகள் வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர். அதிர்ஷ்டவசமாக கேடி ராமராவை அவரின் பின்னால் இருந்த பாதுகாவலர் பிடித்து கொண்டார். அதனால் அவர் வாகனத்தில் இருந்து கீழே விழாமல் தொங்கியபடி கிடந்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications