தெலங்கானா யாருக்கு? முட்டிமோதும் காங்கிரஸ்-பிஆர்எஸ்! ட்விஸ்ட்டை உடைத்த ரீபப்ளிக் கருத்து கணிப்பு
ஹைதராபாத்: தெலங்கானாவில் இன்று சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் அங்கு காங்கிரஸ்-பிஆர்எஸ் கட்சிகள் இடையே ஆட்சியை பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்பது பற்றி Republic-MATRIZE சார்பில் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.
தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

தெலங்கானா மாநிலம் உருவானது முதல் அங்கு பிஆர்எஸ் கட்சி தான் 2 முறை ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தான் 3வது சட்டசபை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடந்தது. முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ், பாஜக மற்றும் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் தான் இன்று தேர்தல் முடிந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் Republic-MATRIZE சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த கருத்து கணிப்பின்படி தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சி 58 முதல் 68 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் தனி மெஜாரிட்டிக்கு 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 68 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக தற்போது தெலங்கானாவை ஆட்சி செய்யும் முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சியும் காங்கிரஸ் கட்சியை நெருங்கி வரும் வாய்ப்புள்ளதாக இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிஆர்எஸ் கட்சி இந்த தேர்தலில் 46 முதல் 56 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 56 தொகுதிகள் வரை மட்டுமே பிஆர்எஸ் கட்சி வெற்றி பெறலாம் என கூறப்பட்டுள்ளதால் இந்த கருத்து கணிப்பு என்பது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் பாஜக 4 முதல் 9 தொகுதிகளிலும், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 முதல் 7 தொகுதிகளிலும் மற்றவர்கள் தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் Republic -MATRIZE கருத்து கணிப்பு என்பது காங்கிரஸ் கட்சிக்கு உற்சாகத்தை வழங்கி உள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications