போடுறா வெடிய!. தெலங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சி! கேசிஆர் ஷாக்! இந்தியா டிவி எக்ஸிட்போல்
ஹைதராபாத்: தெலங்கானாவில் இன்று சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தான் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

தெலங்கானா மாநிலம் உருவானது முதல் அங்கு பிஆர்எஸ் கட்சி தான் 2 முறை ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தான் 3வது சட்டசபை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடந்தது. முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ், பாஜக மற்றும் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் தான் இன்று தேர்தல் முடிந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளன. தெலங்கானா சட்டசபை தேர்தலுக்கு பிந்யைத கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த கருத்து கணிப்பின்படி தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி முதல் முறையாக ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதன் படி காங்கிரஸ் கட்சி 63 முதல் 79 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக பிஆர்எஸ் கட்சி 31 முதல் 47 தொகுதிகளை கைப்பற்றும் எனவும் பாஜக, 2 முதல் 4 தொகுதிகளில் வெல்லும் எனவும் ஓவைசியின் ஏஐஎம்எம்ஐ கட்சி 5 முதல் 7 தொகுதிகளை கைப்பற்றலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவை பொறுத்தமட்டில் ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால் இந்தியா டிவி -சிஎன்எக்ஸ் கருத்து கணிப்பின்படி காங்கிரஸ் கட்சி குறைந்தது 63 தொகுதிகளிலும் அதிகபட்சமாக 79 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சி முதல் முறையாக அங்கு ஆட்சியை கைப்பற்றும் என இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications