தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி.. அதிகாரத்தை இழக்கும் கேசிஆர்.. C PAC கருத்து கணிப்பில் பரபர தகவல்
ஹைதராபாத்: தெலங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியை பிடிக்கும் என C PAC சார்பில் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தெலங்கானாவில் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி ஆட்சியை இழக்கும் என கூறப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் கடந்த 2014ம் ஆண்டு உதயமானது. இதையடுத்து 2014, 2018 ஆகிய ஆண்டுகளில் 2 சட்டசபை தேர்தல்கள் நடந்தது. இந்த 2 தேர்தல்களிலும் பிஆர்எஸ் (முன்பு டிஆர்எஸ்) கட்சி வெற்றி பெற்று அதன் தலைவர் சந்திரசேகரராவ் முதல்வரானார்.
சந்திரசேகரராவ் தற்போது 10 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில் தான் இன்று 3வது முறையாக தெலங்கானாவில் சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் 63.94 சதவீத ஓட்டுகள் பதிவானது.

தெலங்கானாவை பொறுத்தமட்டில் முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ், பாஜக மற்றும் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது. தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
இந்நிலையில் தான் இன்று தேர்தல் முடிந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளன. C PAC சார்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் முடிவில் காங்கிரஸ் கட்சி தான் தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது மெஜாரிட்டிக்கு 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் ஜெயிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக தற்போது அதிகாரத்தில் உள்ள பிஆர்எஸ் கட்சி 41 தொகுதிகளில் மட்டுமே வென்று ஆட்சியை இழக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதுதவிர பாஜக 4 இடங்களிலும், ஓவைசியின் கட்சி 5 தொகுதிகளிலும் மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் என C PAC சார்பில் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் உற்சாகமடைந்துள்ளள நிலையில் பிஆர்எஸ் தலைவர்கள் ஷாக்காகி இருக்கின்றனர். இருப்பினும் எக்ஸிட்போல் முடிவுகள் எப்படி இருந்தாலும் கூட பிஆர்எஸ் தான் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என சந்திரசேகரராவின் மகன் கேடி ராமராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications