"சம்பவம்" செய்றாரு ரேவந்த் ரெட்டி.. யார்னு பாருங்க? கேசிஆரே மிரளுறாரு.. தெலுங்கானா காங்கிரஸில் புயல்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் எந்தவித தொந்தரவுகளும் இல்லாமல், 10 வருட முதல்வராக இருந்த கேசிஆருக்கு, திடீரென குடைச்சலை தந்தே, அதிர வைத்துக் கொண்டிருக்கிறார் ரேவந்த் ரெட்டி.. யார் இந்த ரேவந்த் ரெட்டி?
தெலுங்கானாவில் காங்கிரஸ் என்னவோ வழக்கமான பாணியில்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால், ரேவந்த் ரெட்டி மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்ட பிறகு தான், புது மாற்றமும், புது தெம்பும், புது வேகமும், கதர் கட்சிக்கே வந்துவிட்டதாக சொல்லப்பட்டது.. இதற்கெல்லாம் காரணம் ரேவந்த் ரெட்டிதான்.

2 தொகுதிகள்: அதனால்தானோ என்னவோ, முதல்வர் சந்திரசேகர் ராவை எதிர்த்து கமரெட்டி தொகுதியில் களமிறங்கியுள்ளார்.. கேசிஆரை போலவே, 2 தொகுதிகளில் போட்டியிட்டிருக்கிறார்.
ஒருவேளை, இந்த தேர்தலில் ரெட்டி வெற்றி பெற்றுவிட்டால், மாநிலத்தின் முதல்வராகவும் பொறுப்பேற்பார் என்ற செய்திகளும் ஓடிக்கொண்டிருக்கின்றன.. அந்தவகையில் கர்நாடகாவை தொடர்ந்து, தெலுங்கானாவிலும் பாஜகவுக்கு கிலியை தரும் இந்த ரெட்டியின் அரசியல் சற்று சுவாரஸ்யமானது..
சுயேச்சை: ஆரம்ப காலத்தில் இவர் ஒரு பாஜக ஆதரவாளர். அதாவது, ஏபிவிபியில் காலடி வைத்துதான், அரசியலுக்கு வந்தார்.. பிறகு சுயேச்சையாக போட்டியிட்டு, எம்எல்ஏவானார்.. பிறகு, தெலுங்குதேசம் பக்கம் போனார். அங்கேயும் போட்டியிட்டு எம்எல்ஏவானார். அடுத்தடுத்த வெற்றியால், தெலுங்குதேசம் கட்சியின் தலைவராக உயர்ந்த ரெட்டி, 2017-ல் தெலுங்குதேசம் கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தார்..
பல கட்சிகளுக்கு சென்று வந்த நிலையிலும், ரெட்டி மீது மிகுந்த மரியாதையையும், கனத்த நம்பிக்கையையும் வைத்தது காங்கிரஸ் மேலிடம்.. இந்த நம்பிக்கைதான், ரெட்டியை, மிக முக்கிய தலைவராக தெலுங்கானா காங்கிரஸில் உயர்த்தியது.. எம்எல்ஏவாக உயர்ந்தார்.. பிறகு எம்பியாக உயர்ந்தார்.. பிறகு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் உயர்ந்தார்.
ரேவந்த் ரெட்டி: 10 வருடம் தெலுங்கானாவை ஆண்ட கேசிஆருக்கு இணையாக ரெட்டியையே முன்னிறுத்தி செக் வைத்தது காங்கிரஸ் மேலிடம்.. தேர்தலுக்கு முந்தைய மற்றும் எக்ஸிட் போல் கணிப்புகளின்படி, காங்கிரஸே வெற்றி பெறும் என்று அறுதியிட்டு சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால், ரேவந்த் ரெட்டியே முதல்வராக அரியணை ஏறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை, ரெட்டியை முதல்வராக அங்கீகரித்தால், அதற்கு காங்கிரஸ் கட்சியிலேயே அதிருப்திகள் வெடிக்க தயாராக உள்ளதாம்.. ஏனென்றால், ரெட்டியை பொறுத்தவரை, எல்லா கட்சிகளிலும் ரவுண்டு அடித்துவிட்டு வந்திருப்பவர். இதனால், அவரை முழுக்க முழுக்க காங்கிரஸ் முகமாக ஏற்க ஒருவித தயக்கம் சில காங்கிரஸ் தலைவர்களுக்கு இருப்பதாக தெரிகிறது.
இன்று முடிவு: எனினும், எத்தனை முட்டுக்கட்டை போட்டாலும், கேசிஆர் என்ற பிரம்மாண்ட தலைவரை, மண்ணை கவ்வ செய்திருக்கும் ரெட்டியை, முதல்வர் பதவியில் உட்கார வைத்து, காங்கிரஸ் மேலிடம் அழகு பார்க்கவே செய்யும் என்கிறார்கள்.
ஆக, 2 முறை முதல்வர் பதவி வகித்த சந்திரசேகர் ராவை வீழ்த்த கமரெட்டி தொகுதியில் களம் கண்ட ரேவந்த் ரெட்டி வெற்றி பெறுவாரா? ஒரே நேரத்தில் கமரெட்டி தொகுதியையும், தெலங்கானா முதல்வர் பதவியையும் சந்திரசேகர் ராவிடமிருந்து தட்டி பறிப்பாரா? மாநில முதல்வராக ஒருமனதாக அங்கீகரிக்கப்படுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்..!!!!
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications