Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செம ஸ்கெட்ச்.. கைக்கொடுத்த கிராமங்கள்.. தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றிக்கு காரணமே இதுதான்!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதல் முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தான் தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியின் பின்னணியில் உள்ள முக்கிய விஷயம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தெலங்கானாவில் ஒரே கட்டமாக மொத்தமுள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 30ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தம் 71 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. நேற்று ஓட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

Telangana Election Results: Congress Sweeps 55 out of 75 seats in rural region

தெலுங்கானாவை பொறுத்தவரை ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதன்படி மாறாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதல் முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.

அதாவது காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளில் வெற்றி பெற்று மெஜாரிட்டியை பெற்றுள்ளது. பிஆர்எஸ் கட்சி 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சியை இழந்துள்ளது. பாஜக 8 தொகுதிகளிலும், ஏஐஎம்ஐஎம் கட்சி 7 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தெலுங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கிறது.

இந்நிலையில் தான் தெலுங்கானாவில் 2 முறை ஆட்சியை பிடித்த சந்திரசேகர்ராவின் பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதன் பின்னணியில் உள்ள சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தெலுங்கானவில் நகர்புறங்களில் உள்ள தொகுதிகளை விட கிராமப்புறங்களில் உள்ள சட்டசபை தொகுதிகள் தான் காங்கிரஸ் கட்சிக்கு கைக்கொடுத்துள்ளன.

தெலுங்கானாவை பொறுத்தமட்டில் நகர்புறங்களில் மொத்தம் 28 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 15 தொகுதிகளில் பிஆர்எஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 7 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேவேளையில் Semi Urban பகுதிகளில் மொத்தம் 16 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 8 தொகுதிகளிலும் பிஆர்எஸ் கட்சியும், 6 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியும், பாஜக, சிபிஐ கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.

மாறாக கிராமப்புறங்களில் உள்ள சட்டசபை தொகுதிகளை எடுத்து கொண்டால் காங்கிரஸ் பெரிய அளவில் சாதித்துள்ளது. அதாவது கிராமப்புற பகுதிகளில் மொத்தம் 75 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி 54 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பிஆர்எஸ் கட்சி 16 தொகுதிகளிலும், பாஜக 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க நகர்புறங்களில் உள்ள சட்டசபை தொகுதிகளை விட கிராமப்புற சட்டசபை தொகுதிகள் தான் கைக்கொடுத்துள்ளது.

அதோடு கிராமப்புறங்களில் உள்ள சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற அவர்கள் அளித்த 6 முக்கிய வாக்குறுதிகள் தான் பிரதான காரணமாக அமைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியாக மகாலட்சுமி திட்டத்தின் கீழ் தெலுங்கானாவில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.500க்கு வழங்கப்படும். அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தது.

அதோடு விவசாயிகளின் குத்தகை நிலத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கப்படும். நெல் பயிர் விவசாயிக்கு ஆண்டுக்கு ரூ.500 போனஸ் வழங்கப்படும் என கூறியது. மேலும் ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக காங்கிரஸ் உறுதியளித்தது.

இதுதவிர மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான பரோசா அட்டை வழங்குதல் முதியவர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்குவது மற்றும் ராஜீவ் ஆரோக்கியஸ்ரீ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் காப்பீடு வழங்கப்படும். இதன்மூலம் முதியவர்கள் செலவின்றி மருத்துவ சிகிச்சைகளை பெறலாம் என காங்கிரஸ் 6 திட்டங்களின் கீழ் மொத்தமாக தெரிவித்து இருந்தது உண்மையிலேயே தெலுங்கானாவில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+