தெலுங்கானாவில் ஆட்டத்தை ஆரம்பித்த காங்கிரஸ்.. டிஜிபியையே சஸ்பெண்ட் செய்த தேர்தல் ஆணையம்
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதற்கிடையே ஓட்டு எண்ணிக்கைக்கு நடுவேயே காங்கிரஸ் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டியை பூங்கொத்துடன் சந்தித்ததால் தேர்தல் நடத்தை விதியை மீறியதாக தெலுங்கானா டிஜிபி அஞ்சனி குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானாவில் 119 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 30ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 71 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தன.

இதையடுத்து இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இங்கு தனித்து ஆட்சியமைக்க 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதன்படி தற்போது காங்கிரஸ் கட்சி அங்கு தனி மெஜாரிட்டியை பெற்றுள்ளது.
அதாவது காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளில் வெற்றி பெற்று மெஜாரிட்டியை பெற்றுள்ளது. பிஆர்எஸ் கட்சி 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சியை இழந்துள்ளது. இந்த தேர்தலில் வென்று ஹாட்ரிக் சாதனை படைக்க முதல்வர் சந்திரசேகர் ராவ் முயற்சித்த நிலையில் அது பலன் அளிக்கவில்லை.
அதேபோல் தெலுங்கானாவில் பாஜக 8 தொகுதிகளிலும், ஏஐஎம்ஐஎம் கட்சி 7 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தெலுங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கிறது.
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி 60க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும்போதே தெலுங்கானா டிஜிபி அஞ்சனி குமார் தெலுங்கானா மாநில போலீஸ் நோடல் அதிகாரி (செலவு) சஞ்சய் ஜெயினுடன் சேர்ந்து காங்கிரஸ் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டியை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்தார். அதோடு ரேவந்த் ரெட்டிக்கு, டிஜிபி அஞ்சனி குமார் பூங்கொத்து கொடுத்தார்.
இந்த வேளையில் டிஜிபி அஞ்சன் குமாருடன் இது தேர்தல் விதிமுறையாகும். இந்நிலையில் தான் தேர்தல் நடத்தை விதியை மீறியதாக கூறி தெலுங்கானா டிஜிபி அஞ்சன் குமாரை சஸ்பெண்ட் செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications