Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரம்ப்புக்கு கோவில் கட்டிய தெலுங்கானா விவசாயி.. இப்படியொரு காரணமா? யார் இந்த புஸ்ஸா கிருஷ்ணா?

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிசை வீழ்த்தி டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இதற்கிடையே தான் தெலுங்கானாவில் டொனால்ட் டிரம்புக்கு கோவில் கட்டி வழிபாடு செய்த விவசாயி புஸ்ஸா கிருஷ்ணா பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் கடந்த 5ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் களமிறங்கினார். இதில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் தோல்வியடைந்துள்ளார்.

donald trump temple telangana

அமெரிக்காவின் அதிபராக தற்போது ஜோ பைடன் உள்ள நிலையில் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் 2025 ஜனவரி மாதம் பொறுப்பேற்று செயல்பட உள்ளார். டொனால்ட் டிரம்ப் 4 ஆண்டுகள் வரை அமெரிக்க அதிபர் பதவியில் தொடர உள்ளார். அதாவது 2028 ம் ஆண்டு வரை டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக செயல்பட உள்ளார்.

இதற்கிடையே தான் டொனால்ட் டிரம்புக்கு இந்தியாவில் விவசாயி ஒருவர் கோவில் கட்டிய செய்தி தற்போது வெளியாகி உள்ளது. அந்த விவசாயியின் பெயர் புஸ்ஸா கிருஷ்ணா. தெலுங்கானா மாநில்ம ஜனகன் மாவட்டம் கோனே கிராமத்தை சேர்ந்தவர். இவர் 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இவர் டொனால்ட் டிரம்பின் தீவிர ரசிகராக மாறிப்போனார். 2016 முதல் 2020 வரை டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தார்.

இந்த சமயத்தில் டொனால்ட் டிரம்பின் செயல்பாடு, பேச்சு, நடவடிக்கையால் புஸ்ஸா கிருஷ்ணா ஈர்க்கப்பட்டார். இதனால் அவர் தனது வீடு முழுவதும் டொனால்ட் டிரம்பின் போட்டோக்களை ஒட்டி வைத்தார். அந்த போட்டோக்களுக்கு தினமும் அவர் பூஜையும் செய்து வந்தார். டொனால்ட் டிரம்பின் போட்டோக்களோடு 2018ல் தனி பூஜை அறையை அவர் உருவாக்கி தினமும் பூஜை செய்தார்.

அதன்பிறகு புஸ்ஸா கிருஷ்ணா ரூ.2 லட்சம் செலவில் கடந்த 2019 ம் ஆண்டில் தனது வீட்டின் அருகே டொனால்ட் டிரம்புக்கு 6 அடி உயரத்தில் சிலை நிறுவினார். அந்த சிலைக்கு தினமும் புஸ்ஸா கிருஷ்ணா பூஜை, பாலபிசேகம் செய்து வந்தார். இதனால் புஸ்ஸா கிருஷ்ணாவை அங்கிருந்தவர்கள் டிரம்ப் கிருஷ்ணா என்று அழைக்க தொடங்கினர். கொரோனா காலத்தில் டொனால்ட் டிரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

இதனை தாங்காத புஸ்ஸா கிருஷ்ணா, அழுதபடி டொனால்ட் டிரம்ப் சீக்கிரமாக குணமாக வேண்டும் என்று வீடியோ வெளியிட்டு இருந்தார். 2020ல் டொனால்ட் டிரம்ப் - ஜோபைடனும் அதிபர் தேர்தலில் மோதினார். இதில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். டொனால்ட் டிரம்ப் தோல்வியடைந்தார். ஆனாலும் கூட டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற வேண்டும் என்று புஸ்ஸா கிருஷ்ணா வழிபாடு செய்தார். அதன்பிறகு புஸ்ஸா கிருஷ்ணா கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தனது 33வது வயதில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதனால் புஸ்ஸா கிருஷ்ணா மற்றும் அவர் டொனால்ட் டிரம்புக்கு வைத்த சிலை உள்ளிட்டவை பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதை தொடர்ந்து அங்குள்ள அவரது சிலைக்கு புஸ்ஸா கிருஷ்ணாவின் குடும்பத்தினர் பூஜைகள் செய்து பாலபிசேகம் செய்துள்ளனர்.

அதோடு டொனால்ட் டிரம்புக்கு சிலை அமைத்து கோவில் போல் பூஜை செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை எப்படி புஸ்ஸா கிருஷ்ணாவுக்கு வந்தது? என்று பார்த்தால் அதன் பின்னணியில் ஒருவரின் உயிரிழப்பு என்பது இருக்கிறது. அதாவது கடந்த 2017 ம் ஆண்டில் அமெரிக்காவில் அந்தநாட்டு கடற்படை வீரரால் தெலுங்கானாவை சேர்ந்த சீனிவாஸ் குச்சிபோட்லே என்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் கொலை செய்யப்பட்டார்.

டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்தபோது தான் இந்த சம்பவம் நடந்தது. இது புஸ்ஸா கிருஷ்ணாவை வெகுவாக பாதித்தது. இந்தியர்கள் மீது அமெரிக்காவை சேர்ந்தவர்களுக்கு வெறுப்பு உள்ளது. இதனால் தான் தெலுங்கானாவை சேர்ந்த சீனிவாஸ் கொல்லப்பட்டுள்ளதாக அவர் நம்பினார்.
அப்போது அவர் ஒரு முடிவு செய்தார்.

அமெரிக்க அதிபர் மற்றும் அமெரிக்கர்கள் மீது நாம் மரியாதை காட்டும்போது அவர்களும் பதிலுக்கு நம் நாட்டினர் மீது அன்பு செலுத்துவார்கள் என்று நினைத்தார். இதையடுத்து தான் டொனால்ட் டிரம்ப் பற்றிய விஷயங்களை தேடி தேடி பார்த்து தீவிர ரசிகராகி அவரது போட்டோவை வைத்து வழிபட தொடங்கினார்.

அதேபோல் இன்னொரு சுவாரசிய சம்பவமும் உள்ளது. அதாவது கடந்த 2019 ம் ஆண்டில் உலககோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த போட்டியின்போது டொனால்ட் டிரம்பின் போட்டோவை வைத்து தான் புஸ்ஸா கிருஷ்ணா வழிபட்டு வந்தார். இந்த உலககோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.

இதில் இந்தியா வெல்ல வேண்டும் என வேண்டிக்கொண்டு டொனால்ட் டிரம்ப் போட்டோவுக்கு பூஜை செய்தார். அதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து தான் டொனால்ட் டிரம்பை கடவுளாக பார்த்து 6 அடியில் சிலை வைத்து வழிபட தொடங்கியதாக இறப்பதற்கு முன்பு புஸ்ஸா கிருஷ்ணாவே தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+