சாகும் வயதா இது? இரவில் நெஞ்சு வலியால் துடித்த 13 வயது சிறுமி.. காலையில் மாரடைப்பால் மரணம்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் 13 வயது சிறுமி தனது நண்பர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்த அவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
தெலுங்கானா மாநிலம் மெகபூபாபாத் பகுதியைச் சேர்ந்தவர் போடா ஸ்ரவந்தி. இவருக்கு 13 வயது. இவர் அங்குள்ள பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை விவசாயி.
அவர்களுக்கு ஸ்ரவந்தி இரண்டாவது குழந்தை. இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை ராமநவமியையொட்டி தெலுங்கானாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

விடுமுறை
இதையடுத்து ஸ்ரவந்தி விடுமுறையையொட்டி தனது நண்பர்களுடன் மைதானத்தில் விளையாடியுள்ளார். பிறகு அவர் வீட்டிற்கு சென்று அங்கு தனது தாத்தா பாட்டியுடன் படுத்துள்ளார். அப்போது திடீரென சிறுமி நள்ளிரவு 12.30 மணிக்கு தூக்கத்திலிருந்து எழுந்துள்ளார். அப்போது தனது பாட்டியை எழுப்பி மார்பு பகுதியில் வலிப்பதாக கூறியுள்ளார்.

சிறுமிக்கு மூச்சுவிடுவதில் கடினம்
மேலும் சிறிது நேரத்தில் சிறுமிக்கு மூச்சுவிடுவதிலும் சிரமம் ஏற்பட்டது. உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதற்குள் சிறுமி மயங்கினார். பின்னர் மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறினர். உடனே சிறுமிக்கு சிபிஆர் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

உயிரிழந்த சிறுமி
ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி மரணமடைந்தார். அண்மைக்காலமாக சிறுவர்கள், சிறுமிகளிடம் மாரடைப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக இளைஞர்கள், மாணவர்களு்குக் கூட மாரடைப்பு ஏற்படுகிறது. இதே தெலுங்கானாவில் காமரெட்டி மாவட்டத்தில் 15 நாட்களில் 6 பேர் மாரடைப்பால் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எத்தனை மரணங்கள்
அண்மையில் பேட்மிண்டன் விளையாடிய இளைஞர் ஷியாம் யாதவ் திடீரென மாரடைப்பால் மயங்கி விழுந்து பலியானார். அது போல் கபடி போட்டியில் கரூர் மாவட்டத்தில் பங்கேற்ற 26 வயது இளைஞர் மாணிக்கம் கபடி விளையாடும் போது மாரடைப்பால் பலியானார். இது போல் குடும்ப விழாக்களில் நடனம் ஆடும் போதும் சிலர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். இதயத்திற்கு அதிகமாக வேகம் கொடுப்பதால் இது போன்று மாரடைப்பு ஏற்படுகிறது என சொல்லப்படுகிறது.

கபடி மைதானம்
ஆந்திராவில் ஸ்ரீசத்யசாய் மாவட்டம் அச்சம்பள்ளிதாண்டாவைச் சேர்ந்த 18 வயதான தனுஷ்குமார் நாயக், கடந்த மாதம் கல்லூரி மைதானத்தில் கபடி விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இவ்வாறு மாரடைப்பு ஏற்படும் போது சிபிஆர் செய்தும் சில் பிழைத்துளளனர். அது போல் சிபிஆர் சிகிச்சை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications