முதலிரவில் திடீர் வயிற்றுவலி.. திருமணமான மறுநாளே குழந்தை பெற்ற பெண்! ஷாக்கான கணவன்! எப்படி நடந்தது?
ஹைதராபாத்: தெலங்கானாவில் திருமணம் முடிந்த முதலிரவில் புதுப்பெண் வயிறு வலிப்பதாக கூறிய நிலையில் அவருக்கு மறுநாள் குழந்தை பிறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது எப்படி நடந்தது என்பது குறித்த ஷாக் தகவல் தற்போது வெளியாகி மாப்பிள்ளை வீட்டாரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்தை சேர்ந்தவர் இளம்பெண். இவருக்கும் உத்தர பிரதேச மாநிலம் நொய்டா அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இருவீட்டாரும் சேர்ந்து திருமண ஏற்பாடுகளை செய்தனர்.
பெண் பார்க்கும் படலம், நிச்சயதார்த்தத்தை தொடர்ந்து கடந்த 26ம் தேதி திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் மணப்பெண், மணமகனின் குடும்பத்தினர், உறவினர்கள் பங்கேற்று புதுமண ஜோடியை வாழ்த்தினர்.

இதையடுத்து முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது புதுப்பெண் தனக்கு உடல்நலம் சரியில்லை. வயிறு வலிப்பதாக கணவரிடம் கூறினார். இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது தான் ஷாக் தகவல் வெளியானது.
அதாவது அந்த பெண் 7 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கேட்டனர். இதை கேட்ட புதுமாப்பிள்ளையின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். திருமணம் இன்று தான் நடந்த நிலையில் அவர் எப்படி கர்ப்பமானார்? என தெரியாமல் குழம்பி போயினர். உடனடியாக மணமகள் மற்றும் அவரது பெற்றோரிடம் அவர்கள் விசாரித்தனர். அப்போது அவர்கள் எதுவும் சொல்லாமல் மழுப்பினர்.
இதற்கிடையே மணப்பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்து. மறுநாளே பெண் குழந்தையும் பிறந்தது. இதையடுத்து மாப்பிள்ளை வீட்டார் மணப்பெண்ணின் குடும்பத்தினரிடம் விடாப்பிடியாக உண்மை என்ன? என கேட்டனர். அப்போது அவர்கள் கூறிய தகவல் அவர்களை இன்னும் அதிர்ச்சியடைய செய்தது.
அதாவது மணப்பெண் திருமணத்துக்கு முன்பே தவறான உறவால் கர்ப்பமானார். இதனை மறைத்து தான் திருமணம் செய்து வைத்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கோபத்தின் உச்சிக்கு சென்ற மாப்பிள்ளை வீட்டார் அந்த பெண்ணையும், குழந்தையையும் மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு ஊருக்கு கிளம்பினர்.
இதுபற்றி மாப்பிள்ளை வீட்டார் கூறும்போது, ‛‛பெண் பார்க்க சென்றபோது அவரது வயிறு பெரிதாக இருந்தது. இதுபற்றி அவரிடமும், குடும்பத்தினரிடமும் கேட்டோம். அப்போது கல் அகற்றும் ஆபரேஷன் நடந்தது எனவும், அதனால் வயிறு பெரிதாக இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் சில நாட்களில் வயிறு குறைந்து விடும் எனவும் தெரிவித்தனர்.
இதனை நம்பி தான் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டோம். ஆனால் அவர்கள் கர்ப்பமானதை மறைத்து மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எங்களை ஏமாற்றி திருமணம் செய்து வைத்துள்ளனர். அவரை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை'' என தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி போலீசில் புகார் தெரிவிக்காவிட்டாலும் கூட சம்பவம் குறித்து தன்கார் போலீசாருக்கு இதுபற்றி மருத்துவமனை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி போலீசார் கூறுகையில், ‛‛சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர். இந்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications