ஆந்திரா Vs தெலுங்கானா:நள்ளிரவில் திடீரென 'யுத்த' களமான நாகர்ஜூன சாகர் அணை! 2 மாநில போலீஸ் மோதல்!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன்னதாக நாகர்ஜூன சாகர் அணையில் ஆந்திரா, தெலுங்கானா அரசுகள் இடையே பெரும் மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.
தெலுங்கானா மாநிலத்தில் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் ஒரே கட்டமாக நேற்று வாக்குப் பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. தெலுங்கானா தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தெலுங்கானாவில் நேற்று வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்னதாக நாகர்ஜூன சாகர் அணை பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தெலுங்கானா மாநிலத்தில் கிருஷ்ணா நதியின் குறுக்கே நாகர்ஜூன சாகர் அணை கட்டப்பட்டுள்ளது. தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய இரு மாநில எல்லைகளில்தான் நாகர்ஜூன சாகர் அணை உள்ளது.

நாகர்ஜூன சாகர் அணை குறித்த பிரச்சனைக்கு தீர்வு காண கோதாவரி நதிநீர் தீர்ப்பாயம் உள்ளது. இந்த அணையில் மொத்தம் 29 மதகுகள் உள்ளன. இதில் 1 முதல் 13 மதகுகள் தெலுங்கானாவுக்கு சொந்தமானவை; 14 முதல் 29 வரையிலான மதகுகள் ஆந்திராவுக்கு சொந்தமானவை. நாகர்ஜூன சாகர் அணை திறப்பு என்பது கோதாவரி நதிநீர் தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நாகர்ஜூன சாகர் அணையில் இருந்து 2,000 கன அடிநீரை குடிநீர் பயன்பாட்டுக்காக திறக்க ஆந்திரா அரசு முடிவு செய்தது. இதற்காக நாகர்ஜூன சாகர் அணைக்கு ஆந்திரா அதிகாரிகள் சென்றனர். ஆனால் அங்கிருந்த தெலுங்கானா அதிகாரிகளோ, அவர்களை நாகர்ஜூன சாகர் அணைக்கு உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர். அத்துடன் அந்த அதிகாரிகள் உள்ளே செல்ல முடியாத வகையில் தடுப்புகளையும் தெலுங்கானா அதிகாரிகள் போட்டு வைத்தனர். நாகர்ஜூன சாகர் அணை கட்டுப்பாட்டு அறையையும் பூட்டிவிட்டனர்.
#Nalgonda
— Akalankam Seshu (@ienalgonda) November 30, 2023
Tension prevailed at Nagarjunasagar dam. Andhra Pradesh Police entered into Telangana limits and damaged CC cameras.@XpressHyderabad @NewIndianXpress @Kalyan_TNIE @balaexpressTNIE pic.twitter.com/WLONQl7XiY
இதனால் கொந்தளித்த ஆந்திரா அதிகாரிகள் 1,000க்கும் அதிகமான போலீசாரை அங்கு குவித்தனர். பின்னர் தெலுங்கானாவின் தடையை உடைத்து தங்களுக்கு உரிய மதகுகளில் அணை நீரை திறந்துவிட்டனர். இதனை எதிர்பார்க்காத தெலுங்கானா அதிகாரிகள் அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். இதற்கு பதிலடியாக புதிய மோட்டார்களை கொண்டு வந்து தங்களது எல்லைப் பகுதி மின்சாரம் மூலமாக இயக்கினர்.
#Nalgonda
— Akalankam Seshu (@ienalgonda) November 30, 2023
Tension prevailed at Nagarjunasagar dam. Andhra Pradesh Police entered into Telangana limits and damaged CC cameras.@XpressHyderabad @NewIndianXpress @Kalyan_TNIE @balaexpressTNIE pic.twitter.com/WLONQl7XiY
இதனால் நேற்று இரவு சுமார் 2 மணிநேரம் நாகர்ஜூன சாகர் அணை பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. மேலும் இரு மாநிலங்களிடையேயான போக்குவரத்தும் அப்பகுதியில் துண்டிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோல நாகர்ஜூன சாகர் அணையில் ஆந்திரா, தெலுங்கானா அதிகாரிகள் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. தற்போது மீண்டும் இரு மாநிலங்களிடையே மோதல் வெடித்திருப்பதால் பதற்றம் தொடருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications