வானத்தில் இருந்து திடீரென பொத்து, பொத்து என விழுந்த மீன்கள்.. குழம்பிய பொதுமக்கள்.. அதென்ன மீன் மழை?
ஹைதராபாத்: தெலங்கானாவில் கனமழை பெய்து வரும் நிலையில், அங்கு நடந்த சுவாஸிய சம்பவம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்தியாவில் இப்போது பல பகுதிகளில் பருவ மழையில் தொடங்கி உள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் நல்ல மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மழையில் பனிக்கட்டிகள் அப்படியே விழும் ஆலங்கட்டி மழை குறித்து நாம் கேள்விப் பட்டு இருப்போம். ஆனால், தெலங்கானாவில் வானத்தில் இருந்து மீன்கள் விழும் மீன் மழை பொழிந்து உள்ளது.

எதிர்பார்க்கவில்லை
நாட்டில் பல மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. குறிப்பாக தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருந்தது. மழையை எதிர்பார்த்து மக்கள் காத்து இருந்தாலும் கூட, வானத்தில் இருந்து மீன் மழை பெய்யும் என்று தெலங்கானா மக்கள் துளியும் எதிர்பார்க்கவில்லை.

மீன் மழை
தெலுங்கானாவின் ஜக்தியால் நகரத்தில் வானத்தில் இருந்து திடீரென மீன் மழை பொழிந்ததில் அந்த ஊர் மக்கள் குழம்பிவிட்டனர். தெலுங்கானாவின் ஜக்தியால் நகரில் சில நாட்களுக்கு முன்பு வானத்தில் மீன்கள் மழை பொழிவதைக் கண்ட பலரும் குழப்பமடைந்தனர். இந்த அரிய நிகழ்வைப் பதிவு செய்த சிலர் இந்த வீடியோவை இணையத்திலும் பகிர்ந்துள்ளனர். மழையில் விழுந்த மீன் உடன் அப்பகுதி மக்கள் விளையாடும் காட்சிகளும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

ஏன் இப்படி
இந்த அறிய நிகழ்வு rain of animals என்று அழைக்கப்படுகிறது. பலத்த காற்றுடன் மழை பெய்யும் வானிலையே முக்கிய காரணம் ஆகும். இந்த அரிய நிகழ்வின்போது, நண்டுகள், சிறிய மீன்கள் மற்றும் தவளைகள் போன்ற நீர்நிலைகளில் வாழும் சிறிய விலங்குகள் அங்கிருந்து வானத்திற்கு இழுக்கப்படும். அதைத் தொடர்ந்து கொஞ்ச நேரத்தில் சக்தியை இழக்கும் போது, இந்த சிறு விலங்குகள் மழையாகப் பொழிந்து மக்களை ஆச்சரியப்படுத்தும்.

முதல்முறை இல்லை
இது அரிய நிகழ்வு என்றாலும் கூட கடந்த காலங்களில் உலகின் பல பகுதிகளிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. அவ்வளவு ஏன் இந்தியாவிலும் கூட இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்துள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், உத்தரப்பிரதேசத்தின் படோஹி மாவட்டத்திலும் இதேபோல மீன் மழை பொழிந்தது. அங்குப் பலத்த காற்றுடன் மழை பெய்த போது, சிறு மீன்கள் மழையாகப் பொழிந்தது.

மீன்கள்
இதையடுத்து அப்பகுதியில் வசிப்பவர்கள் மழையின்போது விழுந்த மீன்களைச் சேகரிக்கத் தொடங்கினர். வீட்டின் மாடிகள், வயல்வெளிகள் என மொத்தம் 50 கிலோ மீன்களை கிராம மக்கள் சில மணி நேரங்களில் சேர்த்தாக கூறப்படுகிறது. இருப்பினும், அவர்களில் பலர் பின்னர் மீன்கள் விஷமாக இருக்கலாம் என்று அஞ்சி மீன்களை அப்படியே அருகே இருந்த குளங்களில் வீசினர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications