"தாலியை கழட்டினால்தான் தேர்வறைக்கு செல்ல முடியும்" -தெலங்கானாவில் கொடுமை! இந்து அமைப்புகள் எதிர்ப்பு
ஹைதராபாத்: தெலங்கானாவில் அரசு தேர்வு எழுதச் சென்ற பெண்கள் தாலியை கழட்டிய பின்னரே தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயத்தில், முஸ்லிம் பெண்கள் புர்காவும், ஹிஜாபும் அணிந்து செல்ல அதிகாரிகள் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஹிஜாப் விவகாரம் நாடு முழுவதும் பற்றி எரியும் நிலையில், தற்போது தாலியை கழட்ட சொன்ன விவகாரம் கடும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

முடிவடையாத ஹிஜாப் சர்ச்சை..
கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல கல்லூரிகளில் தடை விதிக்கப்பட்டது. இது, கர்நாடகாவையும் தாண்டி பல மாநிலங்களிலும் எதிரொலித்தது. முஸ்லிம் மாணவிகளை ஹிஜாபை கழட்டுமாறு வற்புறுத்தும் சம்பவங்கள் நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இது இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. "சீக்கியர்கள் அவர்களின் மத அடையாளமான டர்பன் அணியலாம்; இந்துக்கள் திருநீறு பூசலாம்.. ஏன், நாங்கள் மட்டும் ஹிஜாப் அணியக்கூடாது?" என்பதே முஸ்லிம் பெண்கள் பொதுவாக முன்வைக்கும் கேள்வியாக உள்ளது.

தெலங்கானாவில் புது சர்ச்சை
ஹிஜாப் விவகாரத்தால் ஏற்பட்ட சர்ச்சையே இன்னும் முடிவடையாத நிலையில், தெலங்கானாவில் ஒரு புது சர்ச்சை கிளம்பியுள்ளது. தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் வித்யார்த்தி ஜூனியர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. தெலங்கானா அரசுத் தேர்வு வாரியம் (டிஎஸ்பிஎஸ்சி)நடத்தும் குரூப் 1 தேர்வுக்கு இந்தக் கல்லூரியும் ஒரு தேர்வு மையமாக இருந்தது. இங்கு நூற்றுக்கணக்கான தேர்வர்கள் நேற்று காலை வந்தனர்.

தாலியை கழட்டுங்கள்..
அப்போது தேர்வறைகளுக்கு வெளியே இருந்த போலீஸ் அதிகாரிகள், அங்கு வந்த பெண்களிடம் அவர்கள் அணிந்திருந்த நெக்லஸ்கள், வளையல்கள் ஆகியவற்றை கழட்டி வைத்துவிட்டு தேர்வறைக்கு உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன்படி, அனைத்தையும் கழட்டி வைத்த பெண்கள் தாலியை மட்டும் கழட்டாமல் இருந்தனர். ஆனால், தாலியையும் கழட்டி வைத்தால்தான் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பெண்கள், வேறு வழியின்றி தங்கள் தாலிகளை கழட்டி வைத்துவிட்டு தேர்வு எழுதினர்.

புர்காவுக்கு அனுமதி
அதே சமயத்தில், முஸ்லிம் பெண்களுக்கு பெரிய அளவில் எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, புர்கா, ஹிஜாப் அணிந்தவாறே முஸ்லிம் பெண்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள், ஊடகங்களில் வெளியாகி தெலங்கானா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அடிலாபாத் எஸ்.பி. உதய்குமார் ரெட்டி, "தேர்வு எழுத வந்த பெண்களிடம் தாலியை கழட்டுமாறு போலீஸார் கூறியது உண்மைதான். இதில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. சரியான புரிதல் இல்லாமல் போலீஸார் இவ்வாறு செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.

பாஜக எதிர்ப்பு
இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து தெலங்கானா பாஜக மூத்த தலைவர் ப்ரீத்தி காந்தி கூறுகையில், "சிறுபான்மை மக்களை திருப்திப்படுத்தும் அரசியலில் டிஆர்எஸ் கட்சி ஈடுபட்டு வருகிறது என்பதற்கு இதுவே சிறந்த சான்று. உடலையே மூடிக்கொள்ளும் புர்கா உடையை அனுமதிப்பார்களாம். ஆனால், கழுத்தில் மெல்லியதாக இருக்கும் தாலியை அனுமதிக்க மாட்டார்களாம். இது என்ன மாதிரியான அரசியல்? இந்து பெண்களை இழிவுப்படுத்தியதற்காக முதல்வர் சந்திரசேகர ராவ் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications