"மோதிரத்தில் மைக்ரோ சிப்.. வீட்டில் இருந்து நோட் செய்யும் மனைவி!"சந்திரபாபு நாயுடு ரிங்கின் பின்னணி
ஹைதராபாத்: ஆந்திராவில் எதிர்க்கட்சி தலைவராக உள்ள சந்திரபாபு நாயுடுவின் விரலில் இருக்கும் பிளாட்டினம் மோதிரம் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஆந்திரா பிரதேசத்தில் இப்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. 2024 மக்களவை தேர்தல் உடன் தான் அங்குச் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையிலும் கூட எதிர்க்கட்சி தலைவராக உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

பிளாட்டினம் மோதிரம்
தொடர்ச்சியாக மக்களையும் கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறார். 2024 தேர்தலுக்கு முன்னர், மக்கள் ஆதரவைத் திரட்ட வேண்டும் என்பதே அவரது எண்ணம். அப்படி சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அணிந்து இருந்த மோதிரம் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. பொதுவாக அவர் நகைகள் ஏதுவும் இல்லாமல் சாதாரணமாகவே இருப்பார். இந்தச் சூழலில் அவர் அணிந்துள்ள பிளாட்டினம் மோதிரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஜோதிடர்கள் ஆலோசனை?
சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் நடைபெற்ற மினி மகாநாடு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சந்திரபாபு அணிந்து இருந்த மோதிரம் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜோதிடர்களின் ஆலோசனைப்படியே அவர் பிளாட்டினம் மோதிரம் அணிந்து உள்ளதாகத் தகவல் வெளியானது. இருப்பினும், சந்திரபாபு நாயுடுவிற்கு ஜோதிடம் மீதெல்லாம் பெரியளவில் ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை.

என்ன காரணம்
இதன் காரணமாக அவரது மோதிரம் குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு தகவல்களைக் கூற தொடங்கினர். இந்தச் சூழலில் இதனிடையே ராஜாம்பேட்டை தொகுதி மக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறியும் போது, மோதிரத்திற்கான காரணத்தை சந்திரபாபு நாயுடு விளக்கினார். அவரது மோதிரத்திற்கும் ஜோதிடத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லையாம்.

சிப்
இது தொடர்பாக அவர் கூறுகையில், "இந்த பிளாட்டினம் மோதிரம் கம்பியூட்டர் சிப்பை கொண்டது. இது தூக்கம், இதயத் துடிப்பு உள்ளிட்ட உடல்நலன் சார்ந்த தகவல்களைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கும். இது ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற உதவுகிறது. இந்த சிப் பதிவு செய்யப்படும் உடல்நலன் சார்ந்த தகவல்களை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள்.

உடல்நிலை
எனது உடல்நிலை குறித்து தகவல்களை அனைத்தையும் இந்த ரிங் வீட்டில் இருக்கும் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும். வீட்டில் இருந்து எனது உடல்நிலை தொடர்பான தகவல்களை எனது மனைவி புவனேஸ்வரி தொடர்ந்து கண்காணித்து வருகிறார். அவ்வப்போது மொபைல்போன் மூலம் என்னைத் தொடர்பு கொண்டு, எனக்கு ஆலோசனைகளை அளிப்பார்.

ஆரோக்கியம்
மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நடத்த உதவ இதுபோன்ற பல சாதனங்கள் சந்தையில் வந்துள்ளன. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும் இது போன்ற நவீன கேஜெட்களைப் பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். டெக்னாலஜி மீது பெரிய ஆர்வம் கொண்ட சந்திரபாபு நாயுடு, கடந்த காலத்திலும் தொழில்நுட்பத்தின் மீது தனது காதலைக் காட்டும் வகையிலான கருவிகளை அணிந்துள்ளார்
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications