தெலங்கானா சட்டசபைத் தேர்தல்.. சரியும் பிஆர்எஸ் செல்வாக்கு! பிரசாந்த் கிஷோரை நாடிய சந்திரசேகர ராவ்?
ஹைதராபாத்: தெலங்கானாவில் வரும் 30ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஆனால், சந்திரசேகர ராவின் ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கு செல்வாக்கு குறைந்துள்ளதாக உளவுத்துறை கூறியுள்ளது. எனவே இதனை சரி செய்ய பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரை, அம்மாநில முதலமைச்சரும் ஆளும் பிஆர்எஸ் கட்சியின் தலைவருமான சந்திரசேகரராவ் சந்தித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இங்கு பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. தேர்தலையொட்டி இக்கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக போராடி வருகிறது. ஆனால் காங்கிரஸ் பயங்கர டஃப் கொடுத்து வருகிறது. இந்நிலையில் கட்சி மீதான மக்கள் செல்வாக்கை அதிகரிக்க பிஆர்எஸ் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரை நாடியுள்ளது.

அதாவது பொதுவாக தேர்தலுக்கு முன்னர் உளவுத்துறை ஆளும் கட்சிக்கு ஒரு அறிக்கையை கொடுக்கும். அதில் மாநில மக்களின் ஆதரவு ஆட்சிக்கும், கட்சிக்கும் எவ்வாறு இருக்கிறது என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படிதான் தற்போது தெலங்கானாவில் மக்களின் மனநிலை, ஆளும் கட்சிக்கான ஆதரவு எப்படி இருக்கிறது என்பது குறித்த உளவுத்துறை அறிக்கை வெளியாகியிருக்கிறது. அதில் ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கு செல்வாக்கு குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனை சரிகட்ட தான் பிரசாந்த் கிஷோரை கட்சி நாடியிருக்கிறது. அம்மாநிலத்தில் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்கள்தான் இருக்கின்றன. எனவே இந்த குறுகிய நேரத்தில் பிரச்னைகளை சரி செய்ய கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான சந்திரசேகர ராவ் மற்றும் அவரது மகனும் அமைச்சருமான கே.டி.ராமாராவ் ஆகியோர் பிரசாந்த் கிஷோரிடம் நேற்று 3 மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை சமூக ஆர்வலரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான குருராஜ் அஞ்சன் கூறியுள்ளார்.
கடந்த 2019ல் பாஜக மற்றும் சிவசேனா கட்சிகளுக்கு பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்த நிலையில், இவரை நம்பி கேசிஆர் களத்தில் இறங்கியுள்ளார். இவரது திட்டம் வெற்றி பெறுமா? என மிகுந்த எதிர்பார்ப்பு மேலெழுந்திருக்கிறது. எனவே இந்த விவகாரம் அம்மாநில அரசியல் தளத்தில் பேசுபொருளாகியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications