ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"டபுள் ஷாக்" தந்த திருப்பதி தேவஸ்தானம்.. அதுக்குன்னு 5 மடங்கு எகிறிடுச்சாமே வாடகை.. கொதிக்கும் பாஜக

திருப்பதி தேவஸ்தானம் அறைகளின் வாடகையை அதிகரித்துள்ளதால் அதிருப்தி வெடித்துள்ளது

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: திருப்பதி தேவஸ்தானத்தின், தங்கும் விடுதி கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதால், பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்... இதற்கு பாஜக தரப்பு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறது.

உலகப் பிரசித்த பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் லட்சக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கிறார்கள். வருகை தரும் பக்தர்கள் தங்குவதற்காக 7 ஆயிரம் அறைகள் கொண்டு தங்கும் விடுதியை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.

இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைகளை கணக்கில் கொண்டு ஏராளமான வசதிகள் குறிப்பாக அன்னதானம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.. தரிசனத்திற்கு வரும் ஏழை எளிய மக்கள் தங்குவதற்காக ரூ.50, 100, 200 என்றும் இந்த அறைகளுக்கு வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது...

 அடிதூள்! மாமல்லபுரம் அருகே வருகிறது புது துணை நகரம்.. ஆளுநர் உரையில் அறிவிப்பு அடிதூள்! மாமல்லபுரம் அருகே வருகிறது புது துணை நகரம்.. ஆளுநர் உரையில் அறிவிப்பு

குளியலறைகள்

குளியலறைகள்

இதைதவிர கூடுதல் கட்டணத்திலும் நிறைய ரூம்கள் உள்ளன.. இவைகளில் தங்களுக்கு எது வசதியாக உள்ளதோ, அதற்கேற்ப பக்தர்கள் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கி கொள்வார்கள்.. ஆனால், பக்தர்களுக்கு வாடகைக்கு விடப்படும் ரூம்களில் ஃபேன்கள், கதவு, ஜன்னல்கள், பாத்ரூம் போன்றவை போதுமான அளவுக்கு பராமரிப்பின்றி இருப்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டினர்.. இதையடுத்து, இந்த வாடகைக்கு விடப்படும் ரூம்களை பராமரிக்க ரூ.110 கோடி டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது..

ஜொலி ஜொலிப்பு

ஜொலி ஜொலிப்பு

இதேபோல் குடும்பத்துடன் வரும் பக்தர்கள் தங்குவதற்காகவும் நிறைய கெஸ்ட் ஹவுஸ்கள் கட்டப்பட்டுள்ளன... இந்த கெஸ்ட் ஹவுஸ்களில் ஏசி உள்ளது.. கெய்சர்கள் வைக்கப்பட்டு சுடுநீர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, நாராயணகிரி கெஸ்ட் ஹவுஸில் ரூ.500, ரூ.600-க்கு வாடகைக்கு விடப்பட்ட ரூம்கள் மொத்தமும் புதுப்பொலிவுடன் மின்னுகின்றன.. ஆனால் ரூம் ரேட், அதிகமாகவிட்டது.. ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.1,700 ஆக உயர்த்தி விட்டனர்.. நந்தகம், வகுளமாதா, பாஞ்ச ஜன்யம், கவுஸ்துபம் உள்ளிட்ட காட்டேஜ்களில் உள்ள ரூம் வாடகையும் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 2,200 ஆக உயர்ந்துவிட்டது.

லாட்ஜ்கள்

லாட்ஜ்கள்

150 ரூபாயாக இருந்து வந்த கட்டணம் தற்போது 1000 ரூபாய்க்கு எகிறிவிட்டது.. ஸ்பெஷல் ரூம்களிலும், ரூ.750 இருந்த வாடகை ரூ.2,200 ஆக உயர்ந்துவிட்டது.. எல்லாவற்றுக்கும் மேலாக, பக்தர்கள் வாடகைக்கு அறை எடுக்க வேண்டும் என்றால் வைப்புத்தொகையுடன் ரூ.3,400 செலுத்தினால் மட்டுமே ரூம்கள் கிடைக்கும். இதனால் தரிசனத்திற்கு வரும் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.. இதற்காக எந்தவித முன்னறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை என்று பக்தர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்..

லட்டு வடை

லட்டு வடை

மேலும் இப்படி, ரூம் வாடகை உயர்த்துவது குறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றவில்லையாம்.. இந்நிலையில், தேவஸ்தான நிர்வாகம் பக்தர்கள் தங்கும் விடுதி வாடகையை பலமடங்கு அதிகப்படுத்தியது குறித்து பாஜக கண்டனம் தெரிவித்திருக்கிறது... இப்படித்தான் ஏற்கனவே, திருப்பதி - திருமலை இடையே இயக்கப்படும் பஸ் கட்டணம், லட்டு, வடை பிரசாதம் போன்றவற்றின் விலையும் உயர்த்தப்பட்டன... சமீபத்தில் அலிபிரி செக் போஸ்ட்டிலும் வாகன கட்டணமும் உயர்த்தப்பட்டது... இப்போது தேவஸ்தான காட்டேஜ்களிலும் ரூம் வாடகையை உயர்த்திவிட்டதால், பக்தர்கள் புலம்ப தொடங்கி உள்ளார்களாம்..!!

English summary
tirupati devasthanam increases room rentals in tirumala and bjp slams
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X