தெலுங்கானாவில் கேசிஆர் - காங் இடையே கடும் போட்டி.. பாஜக நிலைமை படுமோசம்.. ABP-Cvoter கருத்து கணிப்பு
ஐதராபாத்: தெலுங்கானாவில் வரும் நவம்பர் 30 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தில் எந்த கட்சி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்பது குறித்த ABP-Cvoter கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இதில், இந்த முறை கேசிஆருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் எனத் தெரிகிறது
தெலுங்கானாவில் இப்போது கேசிஆர் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. தெலுங்கானா மாநிலம் உருவானது முதலே அங்கே பிஆர்எஸ் கட்சியை ஆட்சியில் இருந்து வருகிறது. கடந்த தேர்தலில் கூட பிஆர்எஸ் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. ஆனால், இந்த முறை தெலுங்கானாவில் கேசிஆருக்கு கடும் சவால் காத்திருப்பதாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தெலுங்கானா மாநிலத்தில் வரும் நவம்பர் 30 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், தெலுங்கானாவில் தேர்தல் களம் உச்ச கட்ட அனல் பறக்க தொடங்கி விட்டது. இந்த நிலையில், ஏபிபி சிவோட்டர் கருத்துக்கணிப்பு இன்று முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கும் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கும் கடும் போட்டி இருக்கும் என்று தெரிகிறது.
சந்திரசேகர் ராவின் பி.ஆர். எஸ் கட்சி 43 முதல் 55 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 48 முதல் 60 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தெலுங்கானாவில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையிலும் அக்கட்சிக்கு வெறும் 5 முதல் 11 இடங்களே கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
வாக்கு சதவிகிதத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு 39 சதவிகிதமும், பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு 37 சதவிகிதமும் கிடைக்க வாய்ப்பு உள்ளதாம். பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு 9.4 சதவீத வாக்குகள் சரிந்துள்ளது. பாஜகவுக்கு 16 சதவிகிதம் வாக்குகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications