சந்திரசேகர ராவை ‛லஞ்சு’க்கு அழைத்த உத்தவ் தாக்ரே.. பாஜகவுக்கு கட்டம் கட்டும் முதல்வர்கள்!
ஐதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை, பிப்ரவரி 20ல் மும்பையில் ‛லஞ்ச்' சாப்பிட மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அழைத்துள்ளார். 2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு கட்டம் கட்ட மேற்கொள்ளும் முயற்சிக்கு இது பலம் சேர்ப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவ் தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக பேசி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சிக்கிறார். காங்கிரஸின் ராகுல்காந்தி கேட்டது போல், ‛‛புல்வாமா தாக்குதலுக்கு பின் நடந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தொடர்பான ஆதாரங்களை காட்டுங்கள்'' எனக்கூறினார்.
மேலும் ‛‛இந்தியாவில் வரி ஏற்றிய முட்டாள்களே அதை குறைக்க வேண்டும். மத்தியில் ஆளும் பாஜகவை விரட்டியடிக்க தேசிய அரசியலிலும் ஈடுபடுவேன். மக்கள் ஆதரவளிக்க வேண்டும்'' என பேசி வருகிறார். மேலும் பாஜக கூட்டணியில் இல்லாத பிற மாநில கட்சி தலைவர்களை சந்திக்க சந்திர சேகரராவ் திட்டமிட்டுள்ளார்.

சந்திரசேகர ராவ்
விரைவில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், கேரளா முதல்வர் பினராயி விஜயன், பீகாரின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் தொடர்பில் உள்ள சந்திரசேகர ராவ் விரைவில் சந்தித்து பேச உள்ளார். மேலும் சந்திர சேகரராவின் சமீபத்திய பேச்சுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா, ஜனதாதளம் கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமரான தேவேகவுடா ஆகியோர் தொலைபேசியில் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

மத்தியில் 3வது கூட்டணி
இதன்மூலம் 2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இல்லாத 3ம் கூட்டணியை முன்னெடுக்க சந்திரசேகர ராவ் முயற்சிப்பது தெளிவாகிறது. மேலும் பிரதமர் பதவி மீது சந்திரசேகர ராவுக்கு ஆசை வந்துள்ளதாகவும், இதனால் தான் அவர் பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜகவையும் விமர்சிப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அத்துடன் மத்தியில் 3வது கூட்டணியை உருவாக்கி பிரதமர் வேட்பாளராக மம்தா பானர்ஜி முயற்சிப்பது போல் சந்திரசேகர ராவும் காய்நகர்த்துவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

லஞ்சுக்கு அழைப்பு
இந்நிலையில் தான் இன்று காலை மகாராஷ்ட்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தொலைபேசியில் சந்திர சேகர ராவிடம் பேசியுள்ளார். அப்போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்ததோடு, அரசியல் விஷயங்கள் குறித்து பேசி கொண்டனர். மேலும் பிப்ரவரி 20ம் தேதி மதிய உணவுக்கு(லஞ்ச்) மும்பைக்கு வரும்படி சந்திரசேகர ராவுக்கு, உத்தவ்தாக்கரே அழைப்பு விடுத்துள்ளார். இது இந்திய அரசியலில் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

முழுஆதரவு அளிப்பதாக...
ஏனென்றால் மகாராஷ்டிராவில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த சிவசேனா சமீபத்தில் விலகி, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சியை பிடித்தது. தற்போதைய சூழலில் உத்தவ் தாக்கரேவும், பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் தான் உள்ளார். இதனால் தான் இந்த அழைப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. இதுகுறித்து சந்திரசேகரராவின் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‛‛உத்தவ் தாக்கரே பிப்.,20ல் மதிய உணவுக்கு அழைத்துள்ளார். பாஜகவின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்க்க எப்போதும் நாங்கள் முழு ஆதரவு அளிப்போம். கூட்டாச்சி உணர்வை உயர்த்தும் வகையில் பிரித்தாளும் விசைகளுக்கு எதிராக சரியான நேரத்தில் உங்கள் குரலை கொடுத்துள்ளீர்கள்'' என பாராட்டியதாக கூறப்பட்டுள்ளது.

உங்களுடன் நாங்கள்
இதற்கு பதிலாக, ‛‛மகாராஷ்டிராவில் நன்றாக ஆட்சி செய்கிறீர்கள். இந்த நல்லாட்சியை தொடருங்கள். உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்'' என சந்திரசேகர ராவ், உத்தவ் தாக்கரேவிடம் கூறியுள்ளார்.

யார் இவர்
தெலுங்கானா தனிமாநிலம் கோரி பல போராட்டங்களை முன்னெடுத்தவர் தான் சந்திர சேகரராவ். இதையடுத்து ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து பிரிந்து 2014ல் தெலுங்கானா தனி மாநிலமாக மாற்றப்பட்டது. தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி மூலம் ஆட்சியை பிடித்த சந்திரசேகரராவ் ஆட்சிக்காலம் முடிவதற்கு முன்பே ஆட்சியை கலைத்து தேர்தலை சந்தித்து 2வது முறையாக தெலுங்கானாவின் முதல்வராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications