இந்தா ஆரம்பிச்சாச்சு.. "எங்ககிட்ட கேட்டீங்களா?" நதிநீர் இணைப்பு சூப்பர் ஜோக்! சந்திரசேகர ராவ் ஆவேசம்
நதிகளை இணைப்பது குறித்த அறிவிப்பு பல்லாயிரம் ஆண்டு நகைச்சுவை என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் விமர்சித்துள்ளார்.
ஹைதராபாத்: மத்திய பாஜக அரசின் பட்ஜெட் கோல்மால் பட்ஜெட் என்றும் நதிகளை இணைப்பது குறித்த அறிவிப்பு பல்லாயிரம் ஆண்டு நகைச்சுவை என்றும் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உரை நிகழ்த்தினார். அன்றைய தினம் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்
பிப்ரவரி 1ஆம் தேதியன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தால். காகிதமில்லாத பட்ஜெட்டை இரண்டாவது ஆண்டாக தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட்டிற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் தமிழகம், தெலுங்கானா,மேற்குவங்கம் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் அதிருப்தியை பதிவு செய்துள்ளனர்.

சந்திரசேகர ராவ் கருத்து
மத்திய பட்ஜெட் குறித்து, தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ், மத்திய பாஜக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், கோல்மால் பட்ஜெட் என்று கூறியுள்ளார். இந்த பட்ஜெட் சாமானிய மக்களை கடும் விரக்தியில் ஆழ்த்தி உள்ளது. விவசாயிகள் மற்றும் சாமானியர்களுடன், எஸ்.சி - எஸ்.டி - மற்றும் பி.சி. உள்ளிட்ட சிறுபான்மையினருக்கும் மத்திய பட்ஜெட் கடும் விரக்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

புறக்கணிப்பு
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் தெளிவின்மையாக இருக்கிறது. நாட்டின் விவசாயம் மற்றும் கைத்தறி துறைக்கு இந்த பட்ஜெட் ஒரு பெரிய பூஜ்ஜியம். இந்த பட்ஜெட் சிறு வணிகர்களுக்கும் ஏமாற்றத்தை தந்துள்ளது. சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளின் வளர்ச்சியை பட்ஜெட் புறக்கணித்துள்ளது.

செய்வது அதர்மம்
மகாபாரதத்தில் பீஷ்மர் இறக்கும் தருவாயில் கூறிய சுலோகத்தை மேற்கோள் காட்டி மத்திய நிதி அமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். கூறுவது தர்மம், செய்வது அதர்மம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். தெலங்கானாவின் மருமகள் என கூறிக்கொள்ளும் அவர், இம்மாநிலத்திற்கு எதுவும் அறிவிக்கவில்லை. கிராம குளங்களை சீரமைக்கும் காகதீயா திட்டம், அனைத்து வீடுகளுக்கும் பாகீரதா திட்டம் ஆகியவைகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு ஏதுமில்லை
விவசாய போராட்டத்தில் 700 விவசாயிகள் உயிர் துறந்தாலும், விவசாயத்திற்கு இந்த பட்ஜெட்டில் எதுவும் அறிவிக்கவில்லை. இந்த கொரோனா காலகட்டத்தில் இதற்காக தனி நிதியை மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கவில்லை. லாபத்தில் இயங்கும் எல்ஐசியை எதற்கு விற்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பிய அவர், உரம் மீது ரூ.35 ஆயிரம் கோடி மானியத்தை அவர் குறைத்து விட்டார் என்றும் குற்றம் சாட்டினார்.

நதிநீர் இணைப்பு நகைச்சுவை
கிருஷ்ணா, கோதாவரி மற்றும் காவிரி நதிகளை இணைக்கும் திட்டம் தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பில் பங்குதாரர் மாநிலங்களின் ஒப்புதலைப் பெறாமல் அறிவித்துள்ளார். இது பல நூற்றாண்டு கால நகைச்சுவை என்று கூறிய அவர், நதிகள் இணைப்பு குறித்த தனது கொள்கையையும், அதை எளிதாக்குவதற்கான மத்திய அரசின் அதிகாரத்தையும் மோடி அரசு விளக்க வேண்டும் என்று கோரினார். "கோதாவரி நதி நீர் அந்தந்த மாநிலங்களுக்குள் நுழைந்த பிறகு தெலுங்கு மாநிலங்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு என்று பச்சாவத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு சமமான தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எப்படி மீற முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு
நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு தமிழக அரசு வரவேற்பு தெரிவித்தாலும் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், இத்திட்டத்தை ஆரம்பம் முதலே எதிர்க்கிறார். தெலங்கானாவில் கோதாவரி நதி மீது சில அணைகள் கட்டவேண்டியிருப்பதால் காவிரி இணைப்பு திட்டத்தால் தங்கள் மாநிலத்தில் வருங்காலத்தில் தண்ணீர் பிரச்சினை ஏற்படும் என அவர் கருதுகிறார். ஆதலால், முதலில் மகாநதி - கோதாவரி இணைப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அதன் பிறகு கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications