"வாஷிங் மிஷின்" குறுக்கே வந்துடுச்சே.. டான்ஸ் மாஸ்டர் அட்ராசிட்டி.. பக்கத்து வீட்டு பெண்.. ஓ மை காட்
வாஷிங் மெஷின் காரணமாக, பக்கத்து வீட்டு பெண்ணை கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர்
ஹைதராபாத்: மனித உயிர்களின் மதிப்பு இவ்வளவுதானா? என்று கேட்கக்கூடிய அளவுக்கு கொடுமை நடந்துள்ளது.. அசால்ட்டாக ஒரு உயிரை கொன்ற கொடுமை ஆந்திராவில் நடந்து அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.
ஆந்திர மாநிலம் சத்ய சாய் மாவட்டம், கதிரி அடுத்த மாசனம் பேட்டையை சேர்ந்தவர் மனோகர்.. இவர் ஒரு டான்ஸ் மாஸ்டர்...
மனைவி பெயர் பத்மாவதி... இவர்களுக்கு 3 மகள்கள் இருக்கிறார்கள்.. இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் வேமா நாயக். அவரது மகன் பிரகாஷ் நாயக்.

வாஷிங் மெஷின்
மனோகர் வீட்டின் பக்கத்திலேயே, பொதுவழி ஒன்று உள்ளது.. யாராக இருந்தாலும், அனைவருக்குமே இது ஒன்றுதான் பொதுவான வழி. அந்தவகையில், இந்த வழியாகத்தான், வேமா நாயக் தன்னுடைய வீட்டிற்கு செல்ல வேண்டும்... ஆனால், இது பொதுவழி என்றும் பாராமல், பக்கத்து வீட்டில் உள்ள பத்மாவதி, இங்கே வாஷிங் மெஷினை வைத்திருப்பாராம்.. அந்த வாஷிங் மெஷின் அனைவருக்குமே நடந்து செல்ல இடையூறாக இருந்திருக்கிறது.

வாஷிங் மிஷின்
இது தொடர்பாக வேமா நாயக்குக்கும், பத்மாவதிக்கும் நிறைய பிரச்சனைகள் வந்துள்ளன.. பொது இடத்தில் வாஷிங் மெஷின் வைத்து துணி துவைப்பதால் தங்களுக்கு சிரமமாக இருப்பதாக வேமா நாயக் குடும்பத்தினர் மனோகர் குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்தும், அந்த மிஷினை அகற்றாமலேயே இருந்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் காலை, மனோகர் தன்னுடைய மகளுடன் டான்ஸ் கிளாசுக்கு சென்றிருந்தார்.. அப்போது பத்மாவதி தன்னுடைய வாஷிங் மிஷினை நடுவழியில் வைத்து துணிகளை துவைத்து கொண்டிருந்திருக்கிறார்..

கைகலப்பு
இதனால், மறுபடியும் 2 குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.. இதில் ஆத்திரம் அடைந்த வேமா நாயக் மற்றும் அவரது மகன் பிரகாஷ் நாயக் 2 பேரும், பக்கத்தில் கிடந்த கற்களை எடுத்து பத்மாவதியை சரமாரியாக தாக்கி உள்ளனர்.. இதில் படுகாயம் அடைந்த பத்மாவதி ரத்த வெள்ளத்திலேயே கீழே சரிந்து விழுந்தார்... அப்போதும் ஆத்திரம் அடங்காத வேமா நாயக், வீட்டிற்குள் இருந்த கத்தியை எடுத்து வந்து பத்மாவதி வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார்.. இதற்கு பிறகு வேமா நாயக்கும், அவரது மகனும் அங்கிருந்து தப்பி சென்றனர்..

டான்ஸ் மாஸ்டர்
வீட்டிலிருந்த இளைய மகள் தன்னுடைய அப்பா மனோகருக்கு போன் செய்து விஷயத்தை சொல்லவும், மனோகர் விரைந்து வந்தார்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த பத்மாவதியை மீட்டு கதிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்... பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெங்களூர் கொண்டு செல்லும் வழியில் பத்மாவதி பரிதாபமாக இறந்துவிட்டார்.. இது குறித்து கதிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அப்பா, மகனை தேடி கொண்டிருக்கிறார்கள்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தஞ்சை அருகே ஷாக்.. கணவர் - சொந்த அக்காவுக்கு நள்ளிரவில் நேர்ந்த கொடூரம்.. சிக்கிய மனைவி அமுதா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications