பாபு,ஜெகன்,பவன் ஆந்திராவை மையம் கொண்ட BJP.! ஆந்திராவின் டாப்-5 வேட்பாளர்கள்..வெற்றி வாய்ப்பு எப்படி?

Subscribe to Oneindia Tamil

அமராவதி: 18வது மக்களவைத் தேர்தலில் நாளை 4ஆம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற இருக்கும் நிலையில் ஆந்திர மாநில சட்டசபை தேர்தலும் நடைபெற இருக்கிறது. அங்கு தேர்தலில் களம் காணும் டாப் 5 வேட்பாளர்கள் யார் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்..

ஆந்திர பிரதேசத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் 2841 வேட்பாளர்கள் களமிறங்கி இருக்கிறார்கள். நாளை ஒரே கட்டமாக 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் ஆனது நடைபெற இருக்கிறது.

What are the chances of the main candidates contesting in the Andhra Pradesh assembly elections

இரு வாக்குகளை அளிக்க ஆந்திர மக்கள் தயாராகி வருகின்றனர். ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி - தெலுங்கு தேசம் பாஜக ஜனசேனா -காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளும் என 3 அணிகள் சட்டமன்ற தேர்தலில் களம் காண்கின்றன.

நேரடி போட்டி: ஆந்திர தேர்தலை மும்முனை போட்டி நிலவுவதாக கணிக்கப்பட்டாலும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் மக்களவைத் தொகுதிக்கு 454 பேரும் 175 சட்டமன்ற தொகுதிகளில் 2387 பேரும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக விசாகப்பட்டினம் எம்பி தொகுதியில் 33 வேட்பாளர்களும் ராஜமுந்திரி மக்களவைத் தொகுதியில் 12 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

முக்கிய வேட்பாளர்கள்: அதிகபட்சமாக திருப்பதி சட்டமன்ற தொகுதியில் 46 பேர் போட்டியிடுகின்றனர்..சோடவரம் சட்டமன்ற தொகுதியில் வெறும் ஆறு பேர் மட்டுமே போட்டியில் உள்ளனர். தேர்தலில் களம் காணும் முக்கிய டாப் 5 வேட்பாளர்கள் குறித்து பார்க்கும்போது 5 பேர் இந்த பட்டியலில் உள்ளனர். அந்த வகையில் ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண், ரோஜா, நாரா லோகேஷ் ஆகியோர் உள்ளனர்.


ஜெகன் மோகன் ரெட்டி :
தற்போது ஆந்திராவின் முதலமைச்சராக இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி மூன்றாவது முறையாக புலி வெந்துலா தொகுதியில் களமிறங்குகிறார். அவரை எதிர்த்து பிடெக் ரவி என்று அழைக்கப்படும் தெலுங்கு தேசம் கட்சியின் மாரட்டி ரவீந்திரநாத் ரெட்டி போட்டியிடுகிறார். இந்த சட்டமன்ற தொகுதி கடப்பா மக்களவைத் தொகுதிக்குள் வருகிறது. அந்த தொகுதியில் தான் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்எஸ் ஷர்மிளா போட்டியிடுகிறார். இதனால் குடும்ப அரசியலில் அவர் சிக்கி தவிப்பதாக கூறுகின்றனர் ஆந்திர அரசின் நிபுணர்கள். ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் நேரடியாக தாக்குதல்களை தொடுத்து வரும் நிலையில், காங்கிரஸ் தரப்பில் துருவ்குமார் ரெட்டி அங்கு போட்டியிடுகிறார். இருந்த போதும் ஜெகன்மோகன் ரெட்டிகே வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது


சந்திரபாபு நாயுடு: ஆந்திராவின் முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடு குப்பம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். வேலூரை ஒட்டி இருக்கும் இந்த தொகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். 1989ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அங்கு சந்திரபாபு நாயுடுவே வெற்றி பெற்று வருகிறார். தனது நம்பிக்கை குரிய தொகுதியான குப்பம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதால் சந்திரபாபு நாயுடுவின் வெற்றி உறுதியாகி உள்ளது என்றே கூறலாம். அதே நேரத்தில் ஜெகன்மோகன் அரசாங்கத்திற்கு எதிரான மனநிலையில் மக்கள் இருப்பதாக கூறப்படுவதால் அவர் வெற்றி நிச்சயம் என்றே சொல்கின்றனர். இந்த தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் கே.பரத்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் அவ்லா கோவிந்தராஜனும் களமிறங்குகின்றனர்.

பவன் கல்யாண் : ஜனசேனா கட்சித் தலைவரும் நடிகரும் சிரஞ்சீவியின் சகோதரருமான பவன் கல்யாண் பிதாபுரம் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கலையே சினிமா சூட்டிங் போல மாஸ் காட்டிய அவர் தற்போது பாஜக மற்றும் சந்திரபாபு நாயுடுவின் ஆதரவோடு களமிறங்கி இருக்கிறார். அவரை எதிர்த்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் வங்கா கீதா மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் அதபள்ளி சத்யானந்தா ஆகியோர் களமிறங்குகின்றனர். பவன் கல்யாணுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகமே களம் இறங்கியது போல் தான் காணப்படுகிறது. காரணம் ராம்சரண், சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், வருண் தேஜ், சாய் துர்கா தேஜ் உள்ளிட்ட பலர் பவன் கல்யானுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே பவன் கல்யாண் வெற்றியும் அங்கு உறுதி என்று தான் சொல்லப்படுகிறது.

நாரா லோகேஷ்: மேற்கண்ட மூன்று முக்கிய வேட்பாளர்களுக்கு பிறகாக முக்கியத்துவம் வாய்ந்த வேட்பாளராக பார்க்கப்படுபவர் நாரா லோகேஷ். ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகனான இவர் 2019 தேர்தலில் படுதோல்வியை சந்தித்தார். ஜெகன்மோகன் ரெட்டி அரசுக்கு எதிரான அதிருப்தி காரணமாக இந்த முறை தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையில் மங்கலகிரி தொகுதியிலேயே முகாமிட்டு தற்போது களமிறங்குகிறார். அவரை எதிர்த்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் லாவண்யா, சிபிஐ (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பில் சிவசங்கர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். நாரா லோகேஷின் வெற்றியும் ஓரளவு முன்பே கணிக்கப்பட்டதுதான் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

ரோஜா : ஆந்திரா தேர்தலில் முக்கிய வேட்பாளராக பார்க்கப்படுபவர் நடிகை ரோஜா தமிழக எல்லையில் இருக்கும் நகரி தொகுதியில் ஹாட்ரிக் வெற்றிக்காக போட்டியிடுகின்றார். அதிரடியான அரசியல் நடவடிக்கைகள் மூலம் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதரவை பெற்ற அவர் தற்போது அமைச்சராக இருக்கிறார். அதே நேரத்தில் செல்லும் இடங்கள் எல்லாம் அவருக்கு பிரச்சனை இருப்பதாகவே தோன்றுகிறது. காரணம் பல இடங்களில் மக்கள் ரோஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக வாக்காளர்கள் அவருடன் வாக்குவாதத்தில், ஈடுபட்டதும் பல இடங்களில் ரோஜா பிரச்சாரம் செய்யாமலேயே திரும்பிச் சென்றதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்திருக்கும் நிலையில் சொந்த கட்சியினரே அவருக்கு எதிராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகை ரோஜாவின் கணவர் செல்வமணி மற்றும் சகோதரர்களின் தலையீடு கட்சிக்குள் அதிகமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டப்படும் நிலையில் ரோஜாவுக்கு வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+