ஹைதராபாத் மெட்ரோ ரயிலில் ராத்திரியில் யார் இவர்? ஹாயாக காலை தூக்கி எங்கே வெச்சிருக்கிறார் பாருங்க
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் ஒரு பயணி வசமாக சிக்கி உள்ளார்.. ஆடம்பரமான பயணமும், அதிவேக சேவையும் நிறைந்த ஐதராபாத் மெட்ரோ ரயிலில், சக பயணிகளை முகம் சுளிக்க வைத்த ஒரு நபரின் அநாகரிக செயலும், அதற்கு உடனடியாகக் கிடைத்த அதிரடி தண்டனையும் இப்போது தெலுங்கானா மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது ஹைதராபாத்தில்?
மெட்ரோ ரயிலின் ஜன்னல் மற்றும் இருக்கைகள் மீது கால்களை வைப்பது பொதுச் சொத்தை சேதப்படுத்தும் அநாகரிகமான செயலாகும். மெட்ரோ ரயில் சட்ட விதிகளின்படி, இவ்வாறு ரயிலை அசுசிப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம என்பதால் இதற்கு உடனடியாக அபராதமும் சட்டப்பூர்வ நடவடிக்கையும் விதிக்கப்படும்.

மெட்ரோ ரயிலின் ஜன்னல்
ஆனால் இது தெரியாமல் ஒருவர் பொதுவெளியில் மாட்டி அபராதமும் செலுத்தி உள்ளார்.. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நாகோலில் இருந்து ராயதுர்கம் நோக்கி ஒரு மெட்ரோ ரயில் சென்று கொண்டிருந்தது. ரயிலில் பயணிகள் கூட்டம் ஓரளவு இருந்த நிலையில், அதில் ஆண் பயணி ஒருவரும் பயணம் செய்துள்ளார்..
அப்போது அந்த் ஆண் பயணி எந்தவிதமான பொது ஒழுக்கமும் இல்லாமல், தான் உட்கார்ந்திருந்த இருக்கைக்கு எதிரே இருந்த மெட்ரோ ரயில் ஜன்னல் கண்ணாடி மீது தனது காலை நீட்டி வைத்தபடி மிகவும் அலட்சியமாக உட்கார்ந்து வந்துள்ளார்.. இதை பார்த்ததுமே சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.. ஆண் பயணியின் இநத் செயல் அவர்களுக்கு அசெளகரியத்தையும் தந்துள்ளது.
ஹைதராபாத் மெட்ரோ ரயில்
இதனால் அங்கிருந்த பயணி ஒருவர், இந்த அநாகரிகமான செயலைத் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து, ஐதராபாத் மெட்ரோவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தைக் குறியிட்டுப் பதிவிட்டார்.
சமூக உணர்வு இல்லாமல் அந்த பயணி மெட்ரோவில் அமர்ந்திருக்கும் இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வைரலானது. இதைப் பார்த்த நூற்றுக்கணக்கான நெட்டிசன்கள், பொதுச் சொத்தை அவமதித்த அந்த நபரின் நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்துத் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்யத் தொடங்கினர்.
சமூக வலைதளத்தில் வந்த இந்தப் புகாரை ஐதராபாத் மெட்ரோ ரயில் லிமிடெட் (ஹெச் எம் ஆர் எல்) நிர்வாகம் மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டது. உடனடியாக ரயில் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த ரயில் ராயதுர்கம் மெட்ரோ நிலையத்தை வந்தடைந்ததும், அங்கு தயாராக இருந்த போலீசார் அந்தப் பயணியை அதிரடியாகப் பிடித்தனர்.
250 ரூபாய் அபராதம்
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது பெயர் சைதன்யா என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவர் மீது ராயதுர்கம் போலீஸ் நிலையத்தில் முறையான புகார் அளிக்கப்பட்டு, சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து ஐதராபாத் மெட்ரோ ரயில் லிமிடெட் (ஹெச் எம் ஆர்) ஜி எம் செக்யூரிட்டி ஸ்ரீநாத் ரெட்டி தெரிவிக்கையில், "மெட்ரோ ரயிலுக்குள் அநாகரிகமாக நடந்துகொண்ட அந்தப் பயணியின் தவறான நடவடிக்கைக்கு, மெட்ரோ ரயில் சட்டப்படி உடனடியாக 250 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதிலும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் மெட்ரோ நிர்வாகம் எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது. எவ்வளவு அவசரமாகப் பயணித்தாலும், பொது இடங்களுக்குரிய குறைந்தபட்ச ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இந்த அதிரடி நடவடிக்கை அனைத்துப் பயணிகளுக்கும் எச்சரிக்கையாக உணர்த்தியுள்ளது...!!!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications