ஃபோட்டோ செஷனில் அத்துமீறல்.. அட்ஜெஸ்ட்மெண்ட்டில் "கவிழ்த்த" பிரபல டைரக்டர்.. யாரிந்த பரிதாப பெண்?
ஹைதராபாத்: இளம்பெண்ணின் விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.. இது தொடர்பாக ஒருவர் கைதாகியும் உள்ளார். என்ன நடந்தது?
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தை சேர்ந்தவர் சித்தார்த் வர்மா.. 30 வயதாகிறது.. இவர் சினிமாவில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.. ஹைதராபாத்தில் உள்ள கொண்டாபூர் ராகவேந்திரா காலனியில் வசித்து வருகிறார்.

அறிமுகம்: ஆந்திராவை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் சாப்ட்வேர் என்ஜினியராக ஹைதராபாத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, தோழி மூலம் அறிமுகமானார் சித்தார்த்..
அப்போது இளம்பெண்ணிடம், "ரொம்ப அழகாக இருக்கீங்க.. சினிமாவுக்கு வந்தால், எதிர்காலம் சிறப்பாக இருக்கும்" என்று ஆசைவார்த்தை கூறியிருக்கிறார்.. இதைக்கேட்டதுமே இளம்பெண்ணுக்கு குஷியாகிவிட்டது. பிறகு, பெண்ணிடம் செல்போன் நம்பர் வாங்கிக் கொண்டு, அடிக்கடி பேசிவந்தார் சித்தார்த்.. அப்படித்தான் ஒருநாள் போனை போட்டு, தன்னுடைய வீட்டில் போட்டோ செஷன் நடப்பதால், உடனே கிளம்பி வருமாறு சொல்லி உள்ளார்.
ஆசை வார்த்தைகள்: இதை நம்பிய பெண்ணும், சித்தார்த் வீட்டுக்கு சென்றுள்ளார்.. அப்போது மதுபோதையிலிருந்த சித்தார்த், போட்டோ எடுப்பதாக சொல்லி பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார்.. இதனால், அதிர்ச்சி அடைந்த பெண், சித்தார்த் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்..
ஆனால், தான் சொல்கிறபடி நடந்து கொண்டால் மட்டுமே சினிமா சான்ஸ் கிடைக்கும் என்று சொல்லி இளம்பெண்ணை பணிய வைத்துள்ளார்.. இதற்குபிறகு பலமுறை, இளம்பெண்ணிடம் உல்லாசமாக இருந்து வந்தாராம் சித்தார்த்.. எனினும், கடைசிவரை சான்ஸ் வாங்கி தரவில்லையாம்.. ஒருகட்டத்தில் தாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை அறிந்த இளம்பெண், கச்சிபவுலி போலீசில் நேற்று முன்தினம் புகார் தந்துவிட்டார்..
புகார்: இதையடுத்து, போலீசாரும் வழக்குப்பதிந்து சித்தார்த்வர்மாவை கைது செய்தனர்.. அவரிடம் விசாரணையும் துவங்கியிருக்கிறது.. தன்னுடைய வீட்டில் போட்டோ செஷன் என்ற பெயரில் பல பெண்களை, இதுபோல சித்தார்த் ஏமாற்றியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.. அதனால், அவரது செல்போனை பறிமுதல் செய்து, அதிலுள்ள எண்களை வைத்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்..
அத்துடன் இவரால் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் தயக்கமின்றி புகார் அளிக்கலாம் எனவும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் ஆந்திர சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications