"அம்பேத்கரை தோற்கடித்த காங்கிரஸ்!" கேசிஆர் கையில் எடுக்கும் ஆயுதம்! இது தெலுங்கானா அரசியல்! பின்னணி

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானாவில் சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அங்கே அம்பேத்கரை மீண்டும் கையில் எடுத்துள்ளார் கேசிஆர். அவர் ஏன் இப்படிச் சொன்னார்.. அதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

தெலுங்கானாவில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு இப்போது பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி இருக்கிறது. அங்கே மொத்தம் 119 தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்கு ஒரே கட்டமாக நவ.30இல் தேர்தல் நடைபெறுகிறது.

 Why Ambedkar is in the center stage in Telangana election as KCR attacks Congress

தெலுங்கானாவில் இப்போது கேசிஆர் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. தெலுங்கானாவைப் பொறுத்தவரை அங்கே தலித் நலன் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அங்கே தலித் மக்களை மனதில் வைத்து பல்வேறு திட்டங்களை கேசிஆர் அரசு கொண்டு வருகிறது.

கேசிஆர்: கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய கேசிஆர், "தெலுங்கானா தலைமைச் செயலகம் அருகே 125 அடி உயரத்தில் டாக்டர் அம்பேத்கருக்கு உலகிலேயே மிக உயரமான சிலையை நிறுவியுள்ளோம். மேலும், தலித் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்களையும் கொண்டு வருகிறோம். எஸ்சி குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வரை நேரடியாக அளிக்கும் திட்டமும் இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைக் குறிவைத்துப் பேசிய கேசிஆர், "கடைசி தலித் குடும்பத்துக்குத் தலித் பண்டு கிடைக்கும் வரை பிஆர்எஸ் அரசு செயல்படும். தலித் நலனில் அம்பேத்கர் பல போராட்டங்களை நடத்தினார். ஆனால், லோக்சபா தேர்தலில் அம்பேத்கர் தோல்வியை உறுதி செய்தது காங்கிரஸ்தான். லோக்சபா தேர்தலில் அம்பேத்கர் தோற்கடிக்கப்பட்ட வரலாறு உங்களுக்குத் தெரிந்திருக்கும்.. காங்கிரஸ் தான் அவரை தோற்கடித்தது.. அவரது சித்தாந்தத்தையும் காங்கிரஸ் செயல்படுத்தவில்லை" என்று கூறியிருந்தார்.

அம்பேத்கர்: 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, பிரதமர் நேரு முதல் மத்திய அமைச்சரவையை உருவாக்கினார். பல்வேறு துறைகளில் வல்லுநர்களாக இருந்தவர்களைக் கொண்டு முதல் அமைச்சரவை உருவாக்கப்பட்டது. அதில் மொத்தம் 15 அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர். அதில் டாக்டர் அம்பேத்கர் மத்திய சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார். இருப்பினும், அடுத்து நடந்த 1952 தேர்தலில் அம்பேத்கர் போட்டியிட்டார். அப்போது அவர், தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்தில் காங்கிரஸ் எதையும் செய்யவில்லை எனச் சாடினார்.

சுதந்திரத்திற்கு பிறகும் கூட பாரபட்சமாம் புறக்கணிப்பு தொடர்வதாக அவர் சாடினார். முதல் லோக்பசா தேர்தலில் அவர் பாம்பே வடக்கு மத்திய தொகுதியில் இருந்து போட்டியிட்டார். இருப்பினும், அந்த தேர்தலில் அவர் காங்கிரஸ் வேட்பாளரிடம் 15 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். நேருவின் தலைமையில் தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ் மெகா வெற்றியைப் பெற்றது. இருப்பினும், இந்தத் தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். சுமார் 75 ஆயிரம் வாக்குகள் எண்ணப்படவில்லை என்று தேர்தல் கமிஷனிடம் அம்பேத்கர் முறையிட்டார்.

கடும் தாக்கு: தொடர்ந்து அம்பேத்கர் 1954இல் மகாராஷ்டிராவில் உள்ள பண்டாரா தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடுவார். அதில் சுமார் 8,500 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோற்றார். அந்த சமயத்தில் அவர் நேரு தலைமையின் மத்திய அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக வெளியுறவுக் கொள்கை மிக மோசமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அம்பேத்கரால் அந்த சமயத்தில் மாற்றுச் சமூகத்தில் இருந்து மக்களைக் கவர முடியவில்லை என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இருப்பினும், அந்தத் தேர்தலில் அம்பேத்கரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் திட்டமிட்டு பிரச்சாரம் செய்ததாக ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். அதைத்தான் மீண்டும் இப்போது கேசிஆர் தனது பிரச்சாரத்தில் கையில் எடுத்துள்ளார். கேசிஆர் கட்சிக்குத் தலித் வாக்குகள் முக்கியமாக இருக்கும் நிலையில், அம்பேத்கரைக் காங்கிரஸ் தோற்கடித்ததாகக் கூறி மீண்டும் அந்த அரசியலைக் கையில் எடுத்துள்ளார் கேசிஆர். அதற்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை நாம் பொறுத்தே பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+