"டிரம்முக்குள்ள" சரோஜா.. சொல்ல சொல்ல அடங்காத இளம் மனைவி.. கதவை திறந்ததுமே.. மிரண்டு போன போலீசார்
மனைவியை வெட்டி கூறுபோட்ட கணவனை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்
ஹைதராபாத்: சொல்ல சொல்ல கேட்காத இளம் மனைவியால், டென்ஷன் ஆகிவிட்டார் கணவர்.. இதற்கு பிறகுதான் அந்த பகீர் முடிவை எடுத்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள எஸ்பிஆர் ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் அனில்குமார்... இவரது மனைவிக்கு கடந்த சில காலமாகவே உடல்நலக்கோளாறு ஏற்பட்டு வந்தது..
இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு சிகிச்சை பலனின்றி மனைவி இறந்துவிட்டார்.. இதனையடுத்து, 6 மாதங்களுக்கு முன்பு 2வதாக ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார் அனில்குமார்.. அவர் பெயர் சரோஜா..

சரோஜாவுக்கு கோபம்
ஹைதராபாத் எஸ்பிஆர் ஹில்ஸ் பகுதியில் இவர்கள் குடியிருந்து வந்தனர்.. திருமணமான சில மாதங்கள் கழித்துதான், அனில்குமாருக்கு ஏற்கனவே திருமணமான விஷயம் சரோஜாவுக்கு தெரியவந்தது.. முதல் திருமணத்தை மறைத்து சரோஜாவை திருமணம் செய்திருந்தார்.. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறுகள் வெடித்தன.. ஒருகட்டத்தில் வெறுப்படைந்த சரோஜா, அனில்குமாருடன் சண்டை போட்டுக் கொண்டு அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார்.. ஆனாலும், அவரை அவரது பெற்றோர் சமாதானப்படுத்தி ஒரு மாதத்திற்கு முன்பு, அனில்குமார் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

சரோஜா
இந்நிலையில் 4 நாட்களுக்கு முன்பு மறுபடியும் 2 பேருக்கும் பிரச்சனை வந்தது.. இதனால், அனில்குமார் உச்சக்கட்ட ஆத்திரம் அடைந்து சரோஜா கட்டையால் அடித்து கொன்றுவிட்டார்.. அதாவது உடற்பயிற்சி செய்யும் டம்ப்பில் சரோஜாவை அடித்து கொன்றுள்ளார்.. பிறகு, சடலத்தை எங்கு மறைத்து வைப்பது தெரியாமல் விழித்துள்ளார்.. அதற்கு பிறகு அவர் கண்ணில் தண்ணீர் ஊற்றி வைக்கும் ஒரு பெரிய டிரம் சிக்கி உள்ளது.. அதற்குள் சரோஜா சடலத்தை திணிக்க முயன்றார்.. முடியவில்லை..

கூறு போட்ட கணவர்
அதனால், உடலை துண்டு துண்டாக வெட்டி, அந்த டிரம்மில் போட்டு வீட்டிற்குள் வைத்தார்.. பிறகு, வீட்டையும் பூட்டிவிட்டு தலைமறைவானார்.. இதற்கு நடுவில் சரோஜாவின் வீட்டில் இருந்து, அவரது பெற்றோர் போன் செய்துள்ளனர்.. ஆனால், ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது... அதனால் அனிலுக்கு போன் போட்டனர்.. அனிலும் போன் எடுக்கவில்லை.. உடனே சந்தேகம் அதிகமானதால், வீட்டுக்கு வந்து பார்த்துள்ளனர்.. வீடும் பூட்டப்பட்டிருந்தது.. அதற்கு பிறகுதான் போலீசுக்கு போனார்கள்..

அழுகிய பிணவாடை
ஜுப்ளி ஹில்ஸ் போலீசார் விரைந்து வந்து, பூட்டை உடைத்து கொண்டு உள்ளே சென்றால், குப்பென அழுகிய பிண வாடையும் ரத்தவாடையும் சேர்ந்து வந்துள்ளது.. அப்போதுதான், டிரம்மில் சரோஜா உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்ததை கண்டறிந்தனர்.. அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்... அடிக்கடி கோபித்து கொண்டு அம்மா வீட்டுக்கு போனதால், அனில் டென்ஷன் ஆகிவிட்டாராம்.. அந்த கோபத்தில்தான் இப்படி வெட்டி கூறு போட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இப்போது அனில்குமார் கிடைக்கவில்லை.. இன்னும் தேடி கொண்டிருக்கிறார்கள்..!


Click it and Unblock the Notifications
