ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஷூவை" பரிசாக கொடுத்து தெலங்கானா முதல்வர் கேசிஆரை பார்த்து.. ஜெகன்மோகன் சகோதரி சொன்ன அந்த வார்த்தை

தெலங்கானா முதல்வர் கேசிஆருக்கு ஷூ பரிசளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியும் ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.சர்மிளா ஷூ ஒன்றை தெலங்கானா முதல்வர் கேசிஆருக்கு பரிசாக அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் இப்போது முதல்வராக உள்ளவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி. ஆந்திர முதல்வரா இவர் உள்ள நிலையில், தெலங்கானாவில் இவரது சகோதரி புதிய கட்சியைத் தொடங்கினார்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஒய்எஸ்ஆர் தெலங்கானா என்ற பெயரில் கட்சியைத் தொடங்கிய இவர், கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளார்.

குடியரசு தினவிழாவிலும் மோதல்.. தேசியக்கொடி ஏற்றிய ஆளுநர் தமிழிசை! தெலங்கானா முதல்வர் புறக்கணிப்பு குடியரசு தினவிழாவிலும் மோதல்.. தேசியக்கொடி ஏற்றிய ஆளுநர் தமிழிசை! தெலங்கானா முதல்வர் புறக்கணிப்பு

தெலங்கானா

தெலங்கானா

தெலங்கானாவில் கேசிஆருக்கு போட்டி அளிக்கும் வகையில் கட்சியை வலுப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார். தெலங்கானாவில் இப்போது கேசிஆரின் பிஆர்எஸ் கட்சியைத் தவிரப் பெரியளவில் எந்தவொரு கட்சியும் வலுவாக இல்லை. எதிர்க்கட்சி இடத்தை பிடிக்க பாஜக கடுமையாக முயன்று வருகிறது. இதனிடையே ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா அவரது கட்சியை அங்குக் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

 ஷூ பரிசளிப்பு

ஷூ பரிசளிப்பு

இந்தாண்டு இறுதியில் தெலங்கானாவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்குள் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக தெலங்கானா முழுக்க அவர் பாத யாத்திரை செல்ல உள்ளார். தேர்தலுக்கு முன்பு தெலங்கானாவில் அனைத்து இடங்களிலும் இருக்கும் மக்களைச் சந்திக்க அவர் திட்டமிட்டே இந்த பாத யாத்திரை செல்கிறார். இதனிடையே பாத யாத்திரை தொடங்கும் முன்பு சர்மிளா, தெலங்கானா முதல்வர் கேசிஆருக்கு ஷூ ஒன்று பரிசளித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

 துணிச்சல் இருந்தால் வாங்க

துணிச்சல் இருந்தால் வாங்க

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு ஷூ பாக்ஸை பரிசாக வழங்குவதாகக் குறிப்பிட்ட அவர், துணிச்சல் இருந்தால் கேசிஆரும் மாநிலம் முழுக்க பாத யாத்திரை செல்லும் தன்னுடன் இணைந்து நடக்கட்டும் என்று சவால் விடுத்தார். முன்னதாக நிறுத்தப்பட்ட அதே இடத்தில் இருந்து. தொடர்ந்து பேசிய அவர், "தெலங்கானாவை வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும்.. தெலங்கானாவில் எந்தவொரு பிரச்சினை இல்லை என்று அவர்கள் தொடர்ந்து பொய் கூறி வருகிறார்கள்.

 ராஜினாமா செய்யணும்

ராஜினாமா செய்யணும்

கேசிஆர் என்னுடன் இணைந்து பாதயாத்திரையில் நடக்கட்டும். அவர் சொல்வது போல் மாநிலத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றால் நான் அரசியலில் இருந்து விலக்குகிறேன். அதேநேரம் மக்கள் தங்களுக்குப் பிரச்சினை இருக்கிறது என்று சொன்னால்.. பிரச்சினைகளைத் தீர்க்க தவறிய கேசிஆர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.. மேலும், அவர் தெலங்கானா மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

 தலித் முதல்வர் என்னாச்சு

தலித் முதல்வர் என்னாச்சு

தெலங்கானா உருவான சமயத்தில் தலித் ஒருவரை முதல்வராக ஆக்குவேன் என்றெல்லாம் சொன்னார். ஆனால், அவரே முதல்வர் பதவியில் உள்ளார். அவரது மகனை அமைச்சராக்கியுள்ளார். அவரது மகள் எம்பியாக உள்ளார். இதுபோல கேசிஆர் இன்னும் பல வாக்குறுதிகளை அளித்திருந்தார். ஆனால், பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எதையும் அவர் நிறைவேற்றவில்லை. இதையெல்லாம் எனது பாத யாத்திரையில் நான் மக்களிடம் கொண்டு செல்வேன்" என்று அவர் தெரிவித்தார்.

English summary
Jagan Mohan reddy sister YS Sharmila gifts Shoe for telangana CM KCR: Jagan Mohan reddy sister focus on Telangana election 2023.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X