மாதவியின் தலைமுடி வாட்டர் ஹீட்டரில்? மனைவியை குளியலறையில் வைத்து.. "குக்கர்" கணவர் வழக்கில் ட்விஸ்ட்
ஹைதராபாத்: மனைவியை மனசாட்சியே இல்லாமல் கொலை செய்து, உடல் பாகங்களை வெட்டி குக்கரில் வேகவைத்த கணவன், எலும்புகளை கால்வாயில் வீசியிருந்து, பகீரை கிளப்பியிருந்தார்... இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் குருமூர்த்தி. இவர் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு, வெங்கட மாதவி என்பவரை திருமணம் செய்துகொண்டு, தெலங்கானாவின் மேட்சலில் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் இருக்கிறார்கள்.

மாதவியின் நடத்தை: மாதவியின் நடத்தையில் குருமூர்த்திக்கு சந்தேகம் எழுந்த நிலையில், அந்த சந்தேகம் முற்றிப்போய், குடும்பத்தில் பல்வேறு சண்டைகளுக்கு வழிவகுத்தது.. சங்கராந்தி பண்டிகைக்காக, குழந்தைகளை மாமியார் வீட்டுக்கு அனுப்பிய குருமூர்த்தி, கடந்த 16ம் தேதி மனைவியுடன் மறுபடியும் சந்தேக தகராறில் இறங்கினார்.
பிறகு பண்டிகைக்காக மாதவியின் பெற்றோர் போன் செய்துள்ளனர்.. ஆனால், மாதவி போன் எடுக்காததால், போலீசுக்கு புகார் தந்தனர்.. அப்போதுதான், குருமூர்த்தியிடம் விசாரணை ஆரம்பமானது.. போலீசாரே அவரது வாக்குமூலத்தை கேட்டு ஆடிப்போய்விட்டார்கள்.
குக்கர் மனைவி: மனைவியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு, உடலை வெட்டி துண்டுகளாக்கி ஃபிரிட்ஜில் வைத்துவிட்டாராம். பிறகு, யூடியூப் மற்றும் ஆங்கில படங்களை பார்த்து எலும்புகளை கரைப்பது எப்படி? என்பதை தெரிந்து கொண்டாராம். இதற்காக சோதனை முயற்சியாக தெரு நாய் ஒன்றை பிடித்து கொண்டுவந்து, அதனை கொன்று குக்கரில் வேகவைத்து, வெயிலில் காயவைத்து தூள் தூளாக நொறுக்கி, அந்த பொடியை கால்வாயில் கரைத்துள்ளார்.
இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றதுமே, இதே பாணியில் மாதவியின் உடல் பாகங்களை குக்கரில் வேகவைத்து, பொடிப்பொடியாக்கி, கால்வாயில் கரைத்துள்ளார்.. மீதமிருந்த எலும்புகளை ஏரியில் வீசிவிட்டாராம்.
குருமூர்த்தி: இப்போது சிக்கல் என்னவென்றால், குருமூர்த்தி தெளிவான வாக்குமூலத்தை தந்தபோதிலும், இந்த வழக்கில் சில சிக்கல்களை தெலங்கானா போலீசார் எதிர்கொண்டுள்ளார்களாம். குருமூர்த்தி சொன்னபடி, கால்வாயில் உடல்பாகங்களை கண்டுபிடிக்க முடியவில்லையாம்.. அதேபோல, வீட்டில் மனைவியை கொன்றதற்கான தடயங்களும் சிக்கவில்லையாம்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் சொல்லும்போது, "இந்த வழக்கில் எந்த காரணம் கொண்டும் சிக்கிவிடக்கூடாது என்பதில், ஆரம்பத்திலிருந்தே பக்காவாக பிளான் செய்திருக்கிறார் குருமூர்த்தி.. வீட்டில் ரத்தம் தெரியக்கூடாது என்பதற்காக கெமிக்கலை வாங்கிவந்து, வீட்டை முழுமையாக கழுவி விட்டிருக்கிறார்.. கெமிக்கல் என்பதால் தடயங்களை சேகரிப்பதில் சிக்கல் உள்ளது..
ரத்த மாதிரிகள்: அதனால், வேறு மாநில தடய அறிவியல் துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.. அவர்கள் தற்போது குருமூர்த்தி வீட்டில் சோதனை மேற்கொண்டு, ரத்த மாதிரிகள், தலைமுடி போன்றவற்றை எடுத்து, ஆய்வுக்கு அனுப்பியிருக்கிறார்கள்" என்கின்றனர்.
பாத்ரூம் ஹீட்டரில் இருந்து மாதவியின் தலைமுடி எடுக்கப்பட்டுள்ளது. ஹீட்டருக்கு எப்படி அவரது தலைமுடி போனது? என்பது குறித்து குருமூர்த்தியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது..
பகீர் வாக்குமூலம்: அதில், மனைவியை வெட்டி துண்டுகளாக்கிவிட்டு, அதில் சில கடினமான உடல்பாகங்களை மட்டும் பக்கெட்டில் போட்டாராம்.. பிறகு ஹீட்டரில் தண்ணீரை சூடாக்கி அதில் ஊற்றி அந்த உடல் துண்டுகளை வேகவைத்தாராம்.. பிறகு மறுபடியும் அந்த உடல் பாகங்களை குக்கரில் எடுத்து வேகவைத்தாராம்.. பிறகு, எலும்பை உரலில் போட்டு இடித்து மீண்டும் வேக வைத்து அனைத்தையும் சாக்குமூட்டையில் கட்டி எடுத்துச்சென்று ஏரியில் போட்டுவிட்டதாக வாக்குமூலம் தந்துள்ளார்.. இதையெல்லாம் கேட்டு அப்படியே அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் போலீசார்.












Click it and Unblock the Notifications