விவிபேட் இயந்திரத்தை தரையில் தூக்கிப்போட்டு உடைத்த ஜெகன்மோகன் கட்சி எம்எல்ஏ.. வெளியானது வீடியோ
ஹைதராபாத்: ஆந்திரா சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட விவிபேட் இயந்திரத்தை தரையில் தூக்கிப்போட்டு ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ பின்னேலி ராமகிருஷ்ண ரெட்டி உடைக்கும் வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தான் ஆந்திர மாநில தலைமை தேர்தல் அதிகாரி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆந்திர பிரதேசத்தில் 175 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதேபோல் 25 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இங்கு சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்கள் ஒன்றாக நடந்தன. கடந்த 13ம் தேதி இருதேர்தல்களும் நடந்து முடிந்தன. ஓட்டு எண்ணிக்கை ஜுன் 4ல் நடைபெற உள்ளது.

ஆந்திராவை பொறுத்தமட்டில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் மும்முனை போட்டி நிலவுகிறது. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம்+ பாஜக + நடிகர் பவண் கல்யானின் ஜனசேனா மற்றும் காங்கிரஸ் + கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி இடையே போட்டி உள்ளது.
ஆந்திராவில் தேர்தல் நடந்தபோது சில இடங்களில் பிரச்சனைகள் நடந்தன. குறிப்பாக பல்நாடு, திருப்பதி, அனந்தபூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரச்சனைகள் தலைத்தூக்கியது. விவிபேட் இயந்திரங்கள் உடைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு உருவானது. குறிப்பாக பல்நாடு மாவட்டம் மச்செர்லா தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் பின்னேலி ராமகிருஷ்ண ரெட்டி போட்டியிட்டார்.
இவர் மச்செர்லா தொகுதியில் கடந்த 2009, 2012, 2014, 2019 ஆகிய சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது சிட்டிங் எம்எல்ஏவாக மீண்டும் அந்த தொகுதியில் களமிறங்கி உள்ளார். இந்நிலையில் தான் தேர்தல் நாளில் பின்னேலி ராமகிருஷ்ண ரெட்டி தொகுதிக்குட்பட்ட பூத்களில் சென்று பார்வையிட்டார். அப்போது 7 பூத்களில் அவர் விவிபேட் இயந்திரத்தை சேதப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீடியோவில், பால்வாய் கேட் வாக்குச்சாவடிக்குள் சென்ற பின்னேலி ராமகிருஷ்ண ரெட்டி விவிபேட் இயந்திரத்தை தூக்கி தரையில் போட்டு உடைக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இது வெப் கேமராவில் பதிவான நிலையில் அதன் காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் குறித்து எஸ்ஐடி எனும் சிறப்பு விசாரணை குழு விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணை அறிக்கை ஆந்திர மாநில டிஜிபியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் விவிபேட் இயந்திரத்தை சேதப்படுத்திய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ பின்னேலி ராமகிருஷ்ண ரெட்டி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆந்திர மாநில தலைமை தேர்தல் அதிகாரி எம்கே மீனா, மாநில டிஜிபிக்கு அறிவுரை வழங்கி உள்ளார். இதனால் பின்னேலி ராமகிருஷ்ண ரெட்டி சிக்கலில் மாட்டியுள்ளார். முன்னதாக,
ஆந்திராவில் ஒய்ஆர்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ தேர்தல் தொடர்பான சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தெனாலி தொகுதி எம்எல்ஏ சிவக்குமார் வரிசையில் நிற்காமல் ஓட்டளிக்க சென்றார். இதனை தட்டிக்கேட்ட நபரை சிவக்குமார் எம்எல்ஏ தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தாக்கினார். இந்த வீடியோவும் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications