ஜெகன்மோகன் ரெட்டியின் வலதுகரம்.. ஒஎஸ்ஆர் எம்பி அதிரடி கைது! என்ன நடக்குது ஆந்திராவில்?
அமராவதி: ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகளை அம்மாநில போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இன்று முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் வலதுகரமான, நாடாளுமன்ற உறுப்பினர் மிதுன் ரெட்டியை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இன்று காலை விசாரணை குழுவின் முன் மிதுன் ரெட்டி ஆஜராகியிருந்தார். அவரிடம் 7 மணி நேரம் வரை விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கைது குறித்து அவரது குடும்பத்தினருக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் மிதுன் ரெட்டி A4 ஆக, அதவது 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். மதுபானக் கொள்கைகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் போலி நிறுவனங்கள் மூலம் சட்டவிரோத நிதி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதாக இவர் மீது குற்றச்சாட்டு இருக்கிறது.
மதுபான வழக்கு என்பது, ஜெகன்மோகன் ரெட்டிக்கு போடப்பட்ட ஸ்கெட்ச் என்றும் அதில் தற்போது மிதுன் சிக்கியிருக்கிறார் எனவும் அம்மாநில அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். மிதுன் ரெட்டி நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க, எஸ்ஐடி ஏற்கனவே அவருக்கு எதிராக ஒரு லுக் அவுட் சுற்றறிக்கையை பிறப்பித்திருந்தது. உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அவரது முன்ஜாமீனை மறுத்து, சரணடைய அவகாசம் அளிக்க மறுத்துவிட்டது. இதனையடுத்து தற்போது மிதுன் கைதாகியுள்ளார்.
அதிகாரிகள் இப்போது அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தயாராகி வருகின்றனர். அவரது நீதிமன்றக் காவல் குறித்த முடிவு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications