மழை இல்லாமல் வாடும் சிறுவாணி அணை.. கோவையில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் அபாயம்
கோவை: கோவை மாநகரின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக திகழும் சிறுவாணி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் நிரம்பவிலை. இதனால் கோவையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இது பற்றி செய்திகள் பரவிய நிலையில் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக உள்ள கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இன்னும் பெரிய அளவில் வார்டுகளை சேர்க்க முடியும். கோவையின் புறநகர் பகுதிகள் எல்லாம் கோவைக்கு நிகராக வளர்ந்துள்ள போதிலும், இன்னும் கோவை நகருக்குள் சேர்க்கப்படவில்லை.. அப்படி சேர்க்கப்பட்டால் கோவை மாநகரின் வார்டுகள் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கும்.

சரி விஷயத்திற்கு வருவோம். கோவை மாநகரில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில் 36 வார்டுகளின் பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக சிறுவாணி திகழ்கிறது. மிகவும் சுவையான குடிநீரை கொண்ட சிறுவாணி அணையின் மொத்தம் 49.5 அடி உயரமாகும். இந்த அணையின் நீர் பிடிப்பு பகுதிகள் தமிழக எல்லைக்குள் இருந்தாலும், அணை கேரள எல்லையில் அமைந்திருக்கிறது.
அணையை பயன்படுத்துவது தமிழகம் என்கிற போதிலும். அணையின் நீர் திறப்பு, நீர் மட்டம் உள்ளிட்டவற்றை கேரள அதிகாரிகள் தான் கண்காணித்து வருகின்றனர். அணையின் பாதுகாப்பு கருதி கடந்த சில ஆண்டுகளாக 45 அடிக்கு மேல் நீர் தேக்கி வைக்க கேரள அதிகாரிகள் அனுமதிக்க மறுக்கிறார்கள். முல்லை பெரியாறு அணை போல் இந்த சிறுவாணி அணையும் பிரச்சனையில் இருக்கிறது. இதனால் பருவமழை காலங்களில் 49.5 அடி உயரம் என்கிற போதிலும் 45 அடி வரை மட்டுமே தண்ணீர் சேமிக்கப்படுகிறது.
கோவையில் பொதுவாக தென்மேற்கு பருவமழையின் போது நல்ல மழை பெய்யும். அதேபோல் வடகிழக்கு பருவமழை பெய்யும் போதும் நல்ல மழை பெய்யும். அதேநேரம் சிறுவாணி அணையை பொறுத்தவரை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பெய்யும் மழையால் தான் அதிகளவு தண்ணீர் கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை குறைவாக பெய்தது. இதனால் அணையின் நீர் மட்டம் 20 அடிக்கும் கீழ் இருந்தது.
அதேநேரம் கோவையில் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்தது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கெல்லாம் ஏற்பட்டது. ஆனால் கோவைக்கு நீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை நீர் பிடிப்பு பகுதியில் எதிர்பார்த்த மழை பெய்யவே இல்லை. இதனால் சிறுவாணி அணையின் நீர் மட்டம் 32 அடி என்ற அளவில் உள்ளது. இதனால் இந்த ஆண்டு சிறுவாணி அணை நிரம்பாத நிலை உருவாகி உள்ளது.
ஒருபக்கம் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்கள் கனமழை மற்றும் வெள்ளத்தால் தத்தளிக்கும் நிலையில், கோவைக்கு குடிநீர் வழங்கும் அணைய சிறுவாணி அணை இன்னும் 32 அடியை தாண்டாத நிலை இருப்பது மக்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
கடந்த ஆண்டு கடந்த ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் அணையின் நீர்மட்டம் கடுமையாக சரிந்ததால் மாநகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் குடிநீர் வினியோகம் செய்யும் நிலை வந்தது. இந்த ஆண்டு சிறுவாணி அணை நிரம்பவில்லை என்றால் வரும் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் பற்றி கோவை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறும் போது, சிறுவாணிஅணை நிரம்பாவிட்டாலும் கோவைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று தெரிவித்தனர்.
கோவை மாநகருக்கு பில்லூர் 1 மற்றும் 2, சிறுவாணி அணை, ஆழியாறு கூட்டு குடிநீர் திட்டம், வடவள்ளி-கவுண்டம்பாளையம் குடிநீர் திட்டம் உள்ளிட்ட குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாகவும் இதில் சிறுவாணி அணையில் இருந்து அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 100 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்படுவதாகவும் கூறினார்கள். அதேநேரம் மழையால் இந்த ஆண்டு இதுவரை அணை நிரம்பததால் அணையில் இருந்து தினமும் 73 எம்.எல்.டி. மட்டும் குடிநீர் எடுக்கப்படுகிறது என்றும் ஒருவேளை சிறுவாணி அணை நிரம்பவில்லை என்றாலும் கூட மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்னும் ஒருசில மாதங்களில் பில்லூர் குடிநீர் திட்டம்-3 செயல்படுத்தப்படும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், கோவை மாநகருக்கு கூடுதலாக ஒரு நாளைக்கு 200 எம்.எல்.டி. வரை குடிநீர் கிடைக்கும் என்றும் இதனால் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான குடிநீர் வழங்க முடியும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications