காஷ்மீரில் 10 ராணுவ வீரர்கள் மரணம்.. 200 அடி பள்ளத்தில் பாய்ந்த குண்டு துளைக்காத வாகனம்.. நாடே சோகம்
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் 200 அடி பள்ளத்தாக்கில் குண்டு துளைக்காத ராணுவ வாகனம் கவிழுந்ததில் அதில் பயணித்த 10 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். மேலும் படுகாயமடைந்த 7 ராணு வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தின் பதர்வா பகுதியில் இன்று குண்டு துளைக்காத ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தது. அதில் மொத்தம் 17 ராணுவ வீரர்கள் சென்றனர். இவர்கள் ராணுவ ஆபரேஷனுக்காக சென்று கொண்டிருந்தனர்.

இந்த வாகனம் பாதர்வா - சாம்பா ரோட்டில் கன்னி டாப் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால் ராணுவ வாகனத்தில் பயணித்த வீரர்கள் அனைவரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீரின் காவல்துறை இணைந்து மீட்பு பணியை தொடங்கியது. அப்போது 4 வீரர்கள் பலியாகி இருந்தனர். 13 வீரர்கள் படுகாயமடைந்து இருந்தனர். இதையடுத்து படுகாயமடைந்தவர்களை மீட்கப்பட்டனர். அப்போது மேலும் 6 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரித்தது.
மற்ற 7 பேருக்கும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வீரர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், மேல் சிகிச்சை தேவையாகவும் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த வீரர்கள் உதம்பூர் ராணுவ மருத்துவமனைக்கு விமானம் மூலமாக கொண்டு செல்லப்பபட்டுள்ளனர். தற்போது அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்தில் பலியான ராணுவ வீரர்களின் பெயர் விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.
இதுபற்றி ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ‛‛கஸ்பிர் ரக குண்டு துளைக்காத ராணுவ வாகனம் ஒன்று ஆபரேஷனுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது கன்னி டாப் பகுதியில் சாலையில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது'' என்றார். இந்த விபத்தில் மரணமடைந்த ராணு வீரர்களுக்கு ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி மனோஜ் சின்ஹா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‛‛தோடாவில் நடந்த துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தில் நமது இந்திய ராணுவத்தின் 10 வீரமிக்க வீரர்கள் உயிரிழந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. நமது வீரர்களின் சிறப்பான சேவையையும், உன்னத தியாகத்தையும் நாம் எப்போதும் நினைவில் கொள்வோம்.
துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இந்த ஆழ்ந்த துயரமான தருணத்தில், ஒட்டுமொத்த தேசமும் துயரமடைந்த குடும்பங்களுடன் ஒற்றுமையுடனும் ஆதரவுடனும் துணை நிற்கிறது. காயமடைந்த வீரர்கள் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்'' என்று கூறியுள்ளார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications