பலாத்காரம் செய்தபோது 100 வயது மூதாட்டி பலி... உ.பி.யில் காமக் கொடூரன் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

லக்னோ: உ.பி.மாநிலத்தில் 100 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்றதில் அவர் இறந்துவிட்டார். இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மீரட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 100 வயது மூதாட்டி. இவர் தனது சகோதரனுடன் அங்குள்ள ஜானி கிராமத்தில் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் அங்கிட் புனியா.

100-Year-old woman raped in Uttar Pradesh and she dies

இவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது 100 வயது மூதாட்டியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தனியாக இருந்த மூதாட்டியை மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்றார்.

இதைத் தடுக்க முயன்ற போது அந்த மூதாட்டியை அங்கிட் கடுமையாக தாக்கினார். அப்போது அவரது அலறல் சப்தம் கேட்டு அங்கு அவரது சகோதரனும், கிராம மக்களும் ஒன்று கூடினர்.

இதையடுத்து அங்கிருந்து அங்கிட் தப்ப முயன்றபோது பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதனிடையே அந்த மூதாட்டி பலியாகிவிட்டார்.

மூதாட்டி பலியாகிவிட்டதால் அங்கிட் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A 100-year-old woman who was unwell died after being raped by a drunk youth in an Uttar Pradesh village early today, police said.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற