For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மன அழுத்தத்தால் 2014ல் 108 பாதுகாப்பு அதிகாரிகள் தற்கொலை – நாடாளுமன்றத்தில் அதிர்ச்சித் தகவல்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கடந்த ஒராண்டில் மட்டும் ராணுவம், மற்றும் விமானப் படையில் பணிபுரியும் 108 பாதுகாப்பு அதிகாரிகள் மன அழுத்தம், பிரச்சினைகளால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், ''2014 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி வரை ராணுவத்தில் பணியாற்றும் 84 பேரும், விமானப்படையில் பணிபுரியும் 24 பேரும் தற்கொலை முடிவை தேடிக் கொண்டு உள்ளனர்.

108 defense personnel committed suicide in 2014…

நீண்டகால தொடர்வேலை, உள்நாட்டு பிரச்னைகள், தனிப்பட்ட பிரச்னைகள், நிதி பிரச்னைகள், மன உளைச்சல், மற்றும் மன அழுத்தத்தை தாங்க இயலாமை போன்றவையே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

உளவியல் ஆலோசனை, யோகா பயிற்சி என்று பணியாளர் தற்கொலையைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

English summary
A total of 108 personnel from Army and Air Force committed suicide in the last one year and the reasons range from long deployment, domestic problems and inability to withstand stress, the Rajya Sabha was informed on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X