காஷ்மீரில்..120 வயதில் தடுப்பூசி போட்டு ..கிராமத்தை ஊக்கப்படுத்திய பாட்டி..ராணுவ தளபதி கவுரவித்தார்!
ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் 120 வயதில் தடுப்பூசி போட்ட பாட்டி ஒட்டுமொத்த கிராமத்துக்கே ஊக்க சக்தியாக இருந்துள்ளார்.
வடக்கு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஒய்.கே. ஜோஷி மற்றும் ராணுவ அதிகாரிகள் பாட்டி தோலி தேவியை கவுரவப்படுத்தினார்கள்.

ஜம்மு-காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டத்தின் கதியாஸ் என்ற குக்கிராமத்தில் வசித்து வருபவர் தோலி தேவி. இவருக்கு 120 வயதாகிறது. இந்த தள்ளாத வயதிலும் சுறுசுறுப்புடன் இருக்கும் தோலி தேவி மற்றவர்களுக்கு வழிகாட்டும் வகையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
முதலில் தயக்கம் காட்டிய கிராம மக்கள் 120 வயது பாட்டி தடுப்பூசி போட்டவுடன் அலை, அலையாக தடுப்பூசி போட்டனர். ''தடுப்பூசி போட்டதால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அனைவரும் தடுப்பூசி போட வேண்டும்'' என்று உற்சாகமாக கூறினார் தோலி தேவி பாட்டி.
ஒட்டுமொத்த கிராமத்துக்கே நம்பிக்கை ஒளி பாய்ச்சிய தோலி தேவியின் செயல் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. பாட்டியின் செயலால் ஈர்க்கப்பட்ட வடக்கு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஒய்.கே. ஜோஷி மற்றும் ராணுவ அதிகாரிகள் நேராக தோலி தேவி பாட்டியின் வீட்டுக்கு சென்றனர்.
கிராம மக்கள் முன்னிலையில் 120 வயது பாட்டி தோலி தேவியை கவுரவித்தனர். இளைய தலைமுறையினரே உடல் உபாதைகளால் அவதிப்படும் இந்த காலத்தில் 120 வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பதுடன் மட்டுமில்லாமல் தடுப்பூசி செலுத்தி மக்கள் அனைவருக்கும் ஊக்கமிக்க சக்தியாக தோலி தேவி பாட்டி இருந்துள்ளார் என்று ராணுவ வீரர்கள் அவரை பாராட்டினார்கள்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications