உ.பி.யில் அதிர்ச்சி... 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 13 வயது சிறுவன் கைது
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.
Recommended Video

பெரெய்லி: உத்தரப்பிரதேச மாநிலம் பெரெய்லியில் 8 வயது சிறுமியை 13 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பெரெய்லி அருகே உள்ள சிறிய கிராமம் சிபி காஞ்சு. இந்த ஊரைச் சேர்ந்த 13 வயது சிறுவன், ஞாயிற்றுக்கிழமை அன்று அதே ஊரைச் சேர்ந்த 8 வயது சிறுமியை தோட்டத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, அந்த சிறுவனை அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அந்த சிறுவனை போலீசார் கைது செய்து, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக பெரெய்லி காவல் கண்காணிப்பாளர் அபினந்த்குமார் சிங் உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருக்கின்றனர். மேலும் அந்த சிறுமிக்கு கவுன்சிலிங்கும் கொடுக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் காஷ்மீர் மாநிலத்தில் சிறுமி ஆஸிபா, காமக் கொடூரன்களால் பாலியல் பலாக்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் ஏற்படுத்திய காயம் இன்னும் ஆராத நிலையில், உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூகம் சார்ந்த பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக அரசுகள் துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கருத்தை மேலும் உற்று நோக்கும் வகையில் இந்த சம்பவம் அமைந்துள்ளது. மாணவர்களுக்கு பாலியல் கல்வியை கற்பித்தல், நீதிபோதனை வகுப்புகளை மீண்டும் தொடங்குதல் போன்ற நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மகளிர் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications