பசி தாங்காமல் உணவை சாப்பிட்ட 13 வயது வீட்டு வேலை செய்யும் சிறுமியை தாக்கிய தம்பதி
பெங்களூர்: பெங்களூரில் வீட்டு வேலை செய்யும் 13 வயது சிறுமியை தம்பதி தாக்கியதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்த சிறுமி அஸ்ஸாமில் வீட்டு வேலைக்கு ஆட்கள் அனுப்பும் நிறுவனம் மூலம் கடந்த ஜூன் மாதம் பெங்களூருக்கு வந்தார். அவர் பெங்களூரில் உள்ள ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். அவர் வேலை பார்த்த வீட்டில் உள்ள தம்பதி அவரை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அந்த தம்பதி சிறுமியை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அந்த தம்பதி சிறுமியை நிம்ஹான்ஸ் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கிருந்து அவர் வாணி விலாஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறுமிக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது உடம்பிலும் காயங்கள் உள்ளன. சமையல் அறையில் உள்ள உணவை எடுத்து சாப்பிடுவதற்காகத் தான் அந்த தம்பதி சிறுமியை இரக்கமின்றி துன்புறுத்தியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த தம்பதியை கைது செய்தனர். பெற்றோரை இழந்த சிறுமி பெங்களூர் வரும் முன்பு வரை பாட்டியின் பராமரிப்பில் இருந்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications