கொல்கத்தாவில் தோண்ட தோண்ட சடலங்கள்.. ரசாயனம் தடவப்பட்ட நிலையில் 14 குழந்தைகளின் உடல்கள்!
கொல்கத்தாவில் நிலம் ஒன்றில் 14 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் பிளாஸ்டிக் பைகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா: கொல்கத்தாவில் நிலம் ஒன்றில் 14 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் பிளாஸ்டிக் பைகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
ஹரிதேவ்பூரில் என்ற மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு இன்னும் அதிக அளவில் உடல்கள் புதைக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
போலீஸ் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது. இது அங்குள்ள மக்களை பெரிய அளவில் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

எப்படி கண்டுபிடித்தார்கள்
ஹரிதேவ்பூரில் கட்டிடம் கட்டுவதற்காக, நிலத்தில் குழி தோண்டப்பட்டுள்ளது. அப்போதுதான் முதல் சடலம் கிடைத்துள்ளது. அதன்பின் வரிசையாக 14 குழந்தைகளை எடுத்து இருக்கிறார்கள். இதில் சில சிறு சிறு கருக்களும் கூட இருந்துள்ளது. இதனால் உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

முழுக்க முழுக்க ரசாயனம்
இதில் குழந்தைகளின் உடல் முழுக்க முழுக்க ரசாயனம் தடவப்பட்டுள்ளது. அதோடு எல்லா குழந்தைகளும் தனித்தனியாக பிளாஸ்டிக் பேக்குகளில் கட்டப்பட்டுள்ளது. இதில் தடவப்பட்ட ரசாயனம் என்ன என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விசாரணை நடத்தி வருகிறார்கள்
இந்த உடல்கள் மருத்துவமனையில் இருந்து எடுத்து வரப்பட்டு புதைக்கப்பட்டு இருக்கலாமா என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, அருகாமையில் உள்ள மருத்துவமனையில் விசாரித்து வருகிறார்கள். கருக்கள் கூட இருப்பதால், வேறு எதாவது பிரச்சனை நடந்து இருக்கலாமா என்று விசாரிக்கப்படுகிறது.

தொடர்ந்து தேடுகிறார்கள்
இந்த நிலையில் அங்கு போலீசார் தொடர் விசாரணையில் இறங்கி உள்ளனர். அதோடு அருகாமையில் உள்ள இடங்களில் குழி தோண்டி வருகிறார்கள். அங்கு உள்ள சிசிடிவி கேமராக்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். அங்கு இன்னும் அதிக சடலங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications