For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சபரிமலையில் நடை திறப்பு.. 144 தடை.. பல்லாண்டுகால மரபு இன்றாவது முறியடிக்கப்படுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    சபரிமலையில் முதல்முறை பெண் போலீசார்.. இந்து அமைப்புகள் மிரட்டல்!

    பத்தினம்திட்டா: சபரிமலையில் சிறப்பு பூஜைக்காக இன்று நடை திறக்கப்படுவதால் அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இங்கு நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    சபரிமலைக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்க சுப்ரீம் கோர்ட் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தது.

    ஐயப்பனை வழிபட பெண்கள் வந்தால் நடையை மூடுவோம்... மேல்சாந்தி மிரட்டல்! ஐயப்பனை வழிபட பெண்கள் வந்தால் நடையை மூடுவோம்... மேல்சாந்தி மிரட்டல்!

    தடுத்து நிறுத்தம்

    தடுத்து நிறுத்தம்

    இந்நிலையில் ஐப்பசி மாத வழிப்பாட்டுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 17-ஆம் தேதி திறக்கப்பட்டு 23-ஆம் தேதி மூடப்பட்டது. சன்னிதானத்துக்கு பெண்கள் வந்தபோது அவர்களை இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தினர்.

    100 மீட்டர்

    100 மீட்டர்

    பம்பை, சன்னிதானம், நிலக்கல், பிலாபள்ளி உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் பெண் பத்திரிகையாளர்கள் உள்பட பல இளம்பெண்கள் 100 மீட்டர் தொலைவில் வந்தும் திரும்பி சென்றனர்.

    நடை திறப்பு

    நடை திறப்பு

    போராட்டம், தாக்குதல் சம்பவம் தொடர்பாக 3,731 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் திருவாங்கூர் கடைசி மன்னர் பாலராமவர்மாவின் பிறந்த நாளையொட்டி இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    நள்ளிரவு முதல் அமல்

    நள்ளிரவு முதல் அமல்

    இங்கு நடைபெறும் சிறப்பு பூஜைக்கு பின்னர் நாளை இரவு நடை சாத்தப்படும். கடந்த முறையை போல் போராட்டம், பதற்றம் ஏற்படாமல் இருக்க இங்கு 144 தடை உத்தரவு நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    பதற்றம் நீடிப்பு

    பதற்றம் நீடிப்பு

    சுமார் 3 நாட்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும் என்பதால் சபரிமலையில் பதற்றம் நீடித்து வருகிறது. சபரிமலைக்கு பெண் பத்திரிகையாளர்களை அனுப்பி வைக்கக்கூடாது என்று ஊடகங்களுக்கு விசுவ இந்து பரி‌ஷத் உள்ளிட்ட அமைப்புகளின் கூட்டமைப்பான சபரிமலை கர்மா சமிதி கேட்டுக்கொண்டுள்ளது.

    English summary
    144 restriction imposed in Sabarimala as the temple opens for Pandalam dynasty's king's birthday function.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X