இதற்கு விடிவே இல்லையா?... பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமியை கண்டக்டர் உள்பட 4 பேர் பலாத்காரம்
மத்திய பிரதேசத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமியை பேருந்து கண்டக்டர் உள்பட 4 பேர் பலாத்காரம் செய்து விட்டனர்.
போபால்: மத்திய பிரதேசத்தில் பள்ளி முடிந்து பேருந்தில் வீடு திரும்பிய 15 வயது சிறுமியை பேருந்து கண்டக்டர் உள்பட 4 பேர் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் கடந்த 16-ஆம் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
ஆனால் அன்றைய தினம் அவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

சந்தல்பூர் சாலை
இதையடுத்து அவரது பெற்றோர் கடந்த 17-ஆம் தேதி போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்து அந்த சிறுமியை தேடும் பணி நடைபெற்றது. அப்போது அந்த சிறுமியை அவரது வீட்டருகே கடந்த சனிக்கிழமை சந்தல்பூர் சாலையில் போலீஸார் மீட்டனர்.

பேருந்தில் ஏறிய சிறுமி
அப்போது சிறுமியிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. அந்த சிறுமி பள்ளியிலிருந்து வெளியே வந்து கடந்த 16-ஆம் தேதி ஒரு பேருந்தில் ஏறியுள்ளார்.

பைக்கில் சென்ற இருவர்
அப்போது அந்த பேருந்தின் கண்டக்டர் அந்த சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு பேருந்தை விட்டு இறக்கியுள்ளார். இதையடுத்து அங்கு தனியாக நின்றிருந்த சிறுமியை பைக்கில் சென்ற இருவர் வீட்டில் விட்டு விடுவதாக கூறி அழைத்து சென்றனர்.

ஆள்நடமாட்டம்
ஆனால் சிறுமியை வீட்டில் விடாமல் அவர்களது கிராமத்தில் கொண்டு சென்று ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து இருவரும் பலாத்காரம் செய்துள்ளனர். இதையடுத்து தனது வீடு நோக்கி வந்து கொண்டிருந்த சிறுமியை பைக்கில் சென்ற இன்னொருவர் வீட்டில் விடுவதாக கூறியுள்ளார்.

4 பேர் கைது
இதையும் நம்பி ஏறிய சிறுமியை அந்த நபரும் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து போலீஸார் அந்த 4 பேரையும் கைது செய்தனர். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications