பெரும் பரபரப்புக்கிடையே நடந்து முடிந்தது 16 மாநிலங்களுக்கான ராஜ்யசபா தேர்தல்
16 மாநிலங்களுக்கான ராஜ்ய சபா தேர்தல் இன்று பெரும் பரபரப்புக்கிடையே நடந்து முடிந்தது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 16 மாநிலங்களுக்கான ராஜ்ய சபா தேர்தல் இன்று பெரும் பரபரப்புக்கிடையே நடந்து முடிந்தது.
58 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிவரை நடைபெற்றது. ராஜ்யசபாவில் ஆளும் பாஜகவுக்கு 58 எம்.பிக்கள்தான் உள்ளனர். ஆனால் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையாக உள்ளன.

ராஜ்யசபாவில் தனிப் பெரும்பான்மைக்கு 126 எம்.பிக்கள் தேவை உள்ளது. இந்த நிலையில் 16 மாநிலங்களில் 58 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
உத்தரப்பிரதேசத்தில் 10, மகாராஷ்டிராவில் 6, பீகாரில் 6, மத்தியபிரதேசத்தில் 5 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 33 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வாகினர்.
எஞ்சிய 25 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. மாலை 4 மணியுடன் இந்த தேர்தல் நடந்து முடிந்தது.












Click it and Unblock the Notifications